கட்டுரைகள்பிரதான செய்திகள்

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற எதிரியே! விக்னேஸ்வரன்

(வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்  தொடர்பில் வடமாகாண சபையும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் உருப்படியான நடவடிக்கைகள் எதனையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்பதை நாட்டு முஸ்லிம்கள் அறிந்து வைத்துள்ளார்கள்.

வடக்கு முஸ்லிம்கள் தனி இனமாக, தனிச் சமூகமாக இருக்கையில் அவர்களை தமிழ் பேசும் மக்கள் என அழைக்கும் விக்னேஸ்வரனின் நயவஞ்சகத்தையும் முஸ்லிம் தரப்பு புரிந்து கொண்டு வருகிறது. வடக்கு முஸ்லிம்களுக்கு விக்னேஸ்வரன் செய்யும் அநீதிகள் குறித்து சுபியான் மௌலவி, அமைச்சர் றிசாத் உள்ளிட்டவர்களிடம் கேட்டால் அவர்கள் மணிக்கணக்காக சொல்வார்கள். அவற்றை பகிரங்கப்படுத்தினால் தமிழ் – முஸ்லிம் உறவுக்கு பங்கம் என, கொக்கரிக்கும் விலைபோன ஒருசிலர் இருப்பதால் அவை இங்கு தவிர்க்கப்படுகிறது. இந்தநிலையில் நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கியிருக்கும் மீள்குடியேற்ற செயலணியை எதிர்க்கும் நடவடிக்கையை விக்னேஸ்வரன் என்ற விஷக் கிருமி எதிர்த்து, குழப்பியடிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளார். அதுதொடர்பான செய்தியை கீழே காணலாம்)

வடமாகாண சபையை ஓரங்கட்டி சிங்கள, முஸ்லிம் மக்களை மட்டும் மீள்குடியேற்றம் செய்வதற்காக மத்திய அரசாங்கம் உருவாக்கியிருக்கும் மீள்குடியேற்ற செயலணியை நாங்கள் அங்கீகரிக்கப்போவதில்லை.

எங்களை ஓரங்கட்டி, எங்களுடைய மாகாணத்தில் எங்களுடைய மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை சகிக்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடமாகாண சபையின் 57 ஆம் அமர்வு நேற்று வியாழக்கிழமை  பேரவையின் சபா மண்டபத்தில் நடை பெற்றது.  இதன்போது மத்திய அரசாங்கம் சிங்கள, முஸ்லிம் மக்களை மட்டும் மீள்குடியேற்றம் செய்வதற்கான செயலணி ஒன்றை மாகாண சபையை ஓரங்கட்டி உருவாக்கியுள்ளமைக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் பிரேரணை ஒன்றை சபையில் முன்மொழிந்து முதலமைச்சர் உரையாற்றினார். அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;

கடந்த 5.7.2016 ஆம் திகதிய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களான சுவாமிநாதன், ரிஷாட் பதியுதீன், பைஸர் முஸ்தபா ஆகியோர் உள்ளடங்கலான 6 அமைச்சர்கள் மற்றும் வடமாகாண, வடமேல் மாகாண பிரதம செயலாளர்கள் கொண்ட செயலணி உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இந்தச் செயலணியின் நிகழ்ச்சி நிரலில் பாரம்பரிய சிங்களக் கிராமங்களில் சிங்கள மக்களை மீள்குடியேற்றல் எனவும் விசேடமாக திருகோணமலை மாவட்டம் உள்ளீர்க்கப்படவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

எனவே இதில் ஒட்டுமொத்தமாக வடமாகாண அரசாங்கத்தின் வகிபாகம் அறவே இல்லை.  வடமாகாணத்திற்கான முன்னைய ஆளுநர் பளிகக்கார ஜனா
திபதிக்கு மீள்குடியேற்ற நிலைமைகள் தொடர்பாக சுட்டிக்காட்டுகையில், மாவட்டரீதியாக மீள்குடியேற்ற செயலணிகள் உருவாக்கப்படவேண்டும் எனவும் அதில் அரசியல் கட்சிகள் உள்ளீர்க்கப்படவேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனை எமது பிரதம செயலாளர் எமக்கு சுட்டிக்காட்டியிருக்கின்றார். இந்நிலையில் மாகாணசபைக்குள் எமக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எங்களுடைய மாகாண அரசாங்கத்தை ஓரங்கட்டிவிட்டு மத்திய அரசாங்கம் தமக்கு தகுந்தாற்போல் காரியங்களை செய்து கொண்டிருக்க முடியாது.

மேலும் சிங்கள, முஸ்லிம் மக்களை மட்டு மல்லாமல் வடமாகாணத்தில் உள்ள தமிழ் மக்களையும், இந்தியா தமிழகத்தில் உள்ள தமிழ் மக்களையும் கூட அவர்களுடைய பூர்வீக நிலங்களில் மீள்குடியேற்றம் செய்யவேண்டும்.

இந்நிலையில் ஒரு சாட்டுக்காக வடமாகா ண பிரதம செயலாளரை செயலணியில் இணைத்துக்கொண்டு எங்களை ஓரங்கட்டிவிட்டு, எங்களுடைய மாகாணத்தில் எங்களுடைய மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை சகித்துக்கொள்ள முடியாது.

சர்வதேச மட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் அவர்களுடைய பூர்வீக நிலங்களில் மீள்குடியேற்றப்படவேண்டும் என சுட்டிக்காட்டிவரும் நிலையில், இவ்வாறான செயற்பாடுகள் கண்டனத்திற்கு உரியவை. அண்மையில் ஐ.ஓ.எம் அமைப்பின் நிபுணர் ஒருவøச்ர சந்தித்தபோது மீள்குடியேற்றம் என்பது சர்வதேச மீள்குடியேற்ற நியமங்கள் அல்லது கொள்கைகளுக்கு அமைவானதாக  நடக்கவேண்டும் என நான் கேட் டிருக்கின்றேன்.

இந்நிலையில் அதனை அவதானித்து உறுதிப்படுத்தவே தான் இலங்கை வந்திருப்பதாக அந்த நிபுணர் எனக்குக் கூறியிருந்தார். எனவே மத்திய அரசாங்கம் இச் செயலணியை உருவாக்க முன்னதாக எங்களுட ன் பேசியிருக்கவேண்டும். அதனை விடுத்து சாட்டுக்கு சிலரை வைத்துக்கொண்டு தாங்கள் நினைத்தாற்போல், தங்களுடைய எண்ணத்திற்கு மீள்குடியேற்றத்தை செய்யவே மத்திய அரசாங்கம் நினைத்துக்கொண்டிருக்கின்றது.

13ஆம் திருத்த சட்டத்தின் பிரகாரம் மாகாண அரசாங்கத்துடன் சில விடயங்கள் தொடர்பாகப் பேசித் தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்பதை மத்திய அரசாங்கம் மறந்திருக்கின்றது. இங்கே பேசிய சிங்கள மாகாணசபை உறுப்பினர் கேட்டிருக்கின்றார். சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு மட்டும் மீள்குடியேற்றமா? தமிழர்களுக்கும் கொடுக்கவேண்டும் என. அதனையே நாங்களும் கேட்டிருக்கின்றோம். இதனை நான் மாகாணசபையில் கொண்டு வந்தமைக்கான முக்கியமான காரணம் பல பிரதேசங்களில் எமக்கும் தெரியாமல் பல விடயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதேபோல் 13 ஆம் திருத்த சட்டத்தின் கீழ் மத்திய அரசாங்கம் மாகாண அரசாங்கத்துடன் சில அதிகாரங்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அவ்வாறு பகிரப்படுவதற்கு முன்னர் இருந்த நிலையினைப் போன்று மத்திய அரசாங்கம் நடக்கின்றது. உதாரணமாக மகாவலி அதிகாரசபையினை குறிப்பிடலாம். எமது மக்களுக்குப் பாதகமாக அல்லது அநீதியாக நடக்கும் சில சம்பவங்கள் எமக்கு மனவருத்தத்தை கொடுத்திருக்கின்றன.

இந்நிலையில் மாகாண அரசாங்கமாகிய நாங்கள் எங்களுக்கான மீள்குடியேற்ற கொள்கை ஒன்றைத் தயாரித்திருக்கின்றோம். அது தொடர்பாக  விரைவில் ஒரு கருத்தரங்கை வைத்து நாங்கள் மத்திக்கு அதனைத் தெரியப்படுத்துவோம்  என்பதுடன் மத்திய அரசாங்கம் தனியே முஸ்லிம், சிங்கள மக்களை மீள்குடியேற்றுவதற்காக மாகாணசபையை ஓரங்கட்டி உருவாக்கிய செயலணியை நாங்கள் எதிர்க்கிறோம். அவ்வாறான செயலணி உருவாக்கப்பட்டதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம் என்றார்.

Related posts

கோப்பியும் இல்லை தேனீரும் இல்லை“ ராஜிதவை இணைத்துகொள்ள மாட்டேன்

wpengine

மஹிந்தவையும் ,மைத்திரியையும் மீண்டும் இணைக்க முயற்சி

wpengine

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை அனைவரும் அங்கிருந்து வெளியேறவுள்ளதாகவும் அறிவிப்பு!

wpengine