பிரதான செய்திகள்

வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம்! பிரான்ஸ் நகரில் கண்காட்சி

எம் அன்பின் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எம் இதயம் பூர்வமான ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாகி வபரஹாத்துகு ,இன்ஷா அல்லாஹ் எல்லாம் வல்ல ரஹ்மானின் பேருவுதவியுடன் எதிர்வரும் 30,october, 2016 அன்று வடமகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின்  26 வது நினைவு தின மாபெரும் பொதுகூட்டமும்,புகைப்பட கண்காட்சியும் மற்றும் சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் உறவுப்பாலமாகவும் உரிமைக்கான குரலாகவும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கம் சர்வதேச அமைப்பான JAFFNA MUSLIM COMMUNITY – INTERNATIONAL ( JMC-I) யின் ஒன்றுகூடல் நிகழ்வும் ,அத்துடன் அதன் பூர்வாங்க அறிமுக நிகழ்வும் இடம்பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது இன்ஷா அல்லாஹ்.

முதன்முறையாக கடந்த 26 வருட காலத்தில் இலங்கைக்கு வெளியில் யாரும் முன்னெடுக்காத எமது மக்களின் மனதில் என்றும் நீங்கா ஆறா துயரின் மாதமான BLACK OCTOBER நினைவு தின நிகழ்வுகள் மற்றும் ஏதிர்கால சந்ததிகளுக்கான வழிகாட்டுதல்களையும் ,காலா காலமாக எம் மக்கள் எதிர் கொண்டு வரும் திட்டமிட்ட புறக்கணிப்புகளையும்,சவால்களையும் தகர்தெரிந்து அவர்களின் சகல வித உரிமைகளையும் பாதுகாத்து அதனை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் கிளர்தந்தெழுந்து திடசங்கடம் பூண்டு சர்வதேச யாழ் சமூகத்தை ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்து அவர்களின் உணர்வு பூர்வமான ஒருமித்த பங்களிப்புடன் இந் நிகழ்வு நடைபெறவிருப்பது விஷேட சிறப்பு அம்சமாக அமைந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

இது இம்முறை இது பிரான்ஸ் நாட்டில் இடம்பெற தீர்மானமாகியுள்ளது இதில் யாழ் சகோதரர்கள் அனைவரும் தவறாமல் பங்கு கொள்ளுமாறும் அத்துடன் வடமாகாண முஸ்லிம்கள் மற்றும் இலங்கை முஸ்லிம் உறவுகள் அனைவரும் கலந்து அன்று போல் என்றும் உங்கள் பங்களிப்பையும் ஆதரவையும் வழங்குமாறு பணிவண்புடன்  வேண்டிக்கொள்கின்றோம்.unnamed-3

JMC-I குழுவினர்

வஸ்ஸலாம்.

*நிகழ்வுகள் விபரம்***

காலம்-30,october,2016

நேரம்  -04.00pm 08.00pm

முகவரி-  Srilankan cultural hall 91,Avenue paul vaillant couturier,93120 La Courneuve.

தொடர்புகளுக்கு-

shawfan -06 51 90 33 88

Lafir – 06 51 58 14 10

Javamil – 0650677744

Ramlan – 0652164159 வஸ்ஸலாம்.

Related posts

சொந்த நிதியில் தெருவிளக்குகளை பெற்றுக்கொடுத்த கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்

wpengine

கோட்டா பழைய பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் தம்பல அமிர தேரர்

wpengine

சாலியை கைது செய்ய வேண்டும்! புர்காவுக்கு எதிரான அமைச்சர்

wpengine