செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திவிளையாட்டு

வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் விடுக்கும் ஊடக அறிக்கை – மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி

தமிழ் சிங்கள புதுவருட தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் இணைந்து நடாத்தும் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி 16.04.2025 புதன்கிழமை நடைபெற உள்ளது.

காலை 6 மணிக்கு யாழ்ப்பாணம் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி முன்றலில் நடைபெறும் மரதன் ஓட்டப் போட்டியானது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு, வெளி மாகாண சுற்றுலாப் பயணிகளுக்கு என இரு பிரிவுகளாக நடைபெறவுள்ளது.

வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட உள்ளூர் போட்டியாளர்களுக்கான 12 கிலோ மீற்றர் தூர போட்டியில் முதல் பரிசாக 25,000/= ரூபாவும் இரண்டாம் பரிசாக 20,000/= ரூபாவும் மூன்றாம் பரிசாக 15,000/= ரூபாவும் வழங்கப்படுவதோடு நான்கு முதல் பத்து இடங்களை பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

வடக்கு மாகாணம் தவிர்ந்த பிற மாகாணங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான 5 கிலோமீற்றர் தூர போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு 10,000/= ரூபா பெறுமதியான பரிசும் இரண்டாம் இடம் பெறுபவருக்கு 7,500/= ரூபா பெறுமதியான பரிசும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு 5,000/= ரூபா பெறுமதியான பரிசும் வழங்கப்பட உள்ளன.

போட்டியில் பங்கு பெற விரும்பவர்கள் google படிவத்தின் ஊடாகவோ அல்லது 0777426924 / 0757795733 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ தொடர்புகொண்டு விண்ணப்பிக்க முடியும்.

வயது எல்லை 15 வயதுக்கு மேல். விண்ணப்ப முடிவுத் திகதி 15.04.2025 ஆகும்.

குறிப்பு- போட்டியின் போது மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிக்கவேண்டும்.

google படிவம் இணைப்பு –

https://forms.gle/wzTyQ3ggPyMXjebs9

வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு

11.04.2025

Related posts

ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது இராணுவம் காட்டுமிராண்டி தனம்! அமைச்சர் றிஷாட் கண்டனம்

wpengine

பௌத்த துறவிகளாக துறவறம் பூண்ட தமிழ்ச் சிறார்கள்- (விடியோ)

wpengine

புலிகளால் துரத்தப்பட்ட மக்கள் மீள்குடியேற வருகின்ற போது உதவாவிட்டாலும் பரவாயில்லை தடையாக வேண்டாம்-அமைச்சர் றிஷாட்

wpengine