பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் 7வது நாளாக

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் 7வது நாளாக இன்றும் தொடர்கின்றது.

கடந்த முதலாம் திகதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் தமக்கான தீர்வு வழங்காத நிலையில் கடந்த 8 ஆம் திகதி தொடக்கம் தமது போராட்ட வடிவத்தை உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றி முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்டம் இடம்பெறுகின்ற இடத்திற்கு ஒரு சில தமிழ் அரசியல் பிரதிநிதிகள் வருகைதந்திருந்த போதிலும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் இதுவரை வருகை தரவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வட மாகாண தொண்டராசிரியர்கள் சாகும்வரையிலான போராட்டம்

wpengine

சலுகை அடிப்படையில் வாகன இறக்குமதி: சுற்றுநிருபத்தில் திருத்தம்

wpengine

பாராளுமன்றத்தில் 5000 ரூபா பணத்தை சாப்பிட்ட முஷ்ரப் எம்.பி! பணம் மோகம்

wpengine