வடக்கு மாகாண சபையின் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“வடக்கு மாகாண சபைக்கு தற்போது உடனடி தேர்தல் அவசியமாக இருக்கின்றது. ஏனெனில் வடக்கு மாகாணம் தற்போது ஜனாதிபதியின் பிரதிநிதி ஒருவரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றது.
இந்நிலையில், அவர் அரசியல் நோக்கிலான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார். இது ஆரோக்கியமான ஒன்றல்ல. எனவே, வடக்கு மாகாண சபைக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும்.
எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் உடனடியாக தேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லையென முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.