செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடக்கு மாகாணத்தின் கிராம வீதிகள் மற்றும் பாலங்களை அபிவிருத்திசெய்ய 5000 மில்லியன் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை தெரிவத்தார்.

யாழ்ப்பாண ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது, குறித்த தொகையை செலவு செய்ய தீரமானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த 5000 மில்லியன் மூலம் 8 மாதங்களில் திறம்பட கிராம விதிகளை அபிவிருத்தி செய்ய கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் ஜனாதிபதி கூறினார்.

மேலும், முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடங்க ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தொடர்ந்தும் தெரிவித்தார்.

Related posts

கல்முனையில் இனவாதம் இயலாமையால் வென்றதா..??

wpengine

வவுனியா- மன்னார் வீதியில் கட்டாக்காலி மாடுகள்! பாதசாரிகள் விசனம்

wpengine

வவுனியா நகரசபையினரின் உடல் வலுவூட்டல் நிலையம் குறைபாடுகளுடன்

wpengine