பிரதான செய்திகள்

வடக்கு மக்களுக்கு மஹேல ஜயவர்தன குழுவினர் 1.6 மில்லியன் ரூபா நிதியுதவி

வடக்கு மாகாண மக்களுக்காக இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான குமார்சங்கக்கார, மஹேல ஜயவர்தன உள்ளிட்ட குழுவினர் 1.6 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளனர்.


வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இந்த நிதியுதவித் தொகையை வழங்கி வைத்துள்ளார்.


பத்தரமுல்லையிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் உப காரியாலத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, “எமது நாடு போன்று உலகமே பாதிக்கப்பட்டுள்ள இந்தக் கொரோனா வைரஸினால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.


எனவே நான், மஹேலஜயவர்தன, சாலிய ஒஸ்ட்டின், நாதன் சிவகாமநாதன் மற்றும் எமது நண்பர்கள் சிலர் இணைந்து ஏதேனுமொரு உதவியைச் செய்ய முடியுமாக இருந்தால், அதனைப் பெரும்பாக்கியமாகக் கருதினோம்.


நாட்டு மக்களுக்கு அநேகமானவர்கள் உதவி செய்கின்றனர். இந்தப் போராட்டத்துக்குக் கரம் கொடுக்கின்றனர். அயலவர்களின் நலன் தொடர்பிலும் கவனம் செலுத்துகின்றனர்.


இதனைத் தொடர்ந்தும் முன்னெடுங்கள். அதேபோன்று, ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள்” – என்று ஊடகவியலாளர்களிடம் குமார் சங்கக்காரதெரிவித்துள்ளார்.

Related posts

இன்றைய ஆட்சியில் சமூகவலைத்தளம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாத ஆட்சியாளர்கள் நாமல்

wpengine

தமிழ் அரசியல் கைதிகளால் மஸ்தான் எம்.பியிடம் மூன்று கோரிக்கைகள் முன்வைப்பு

wpengine

அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்கள் கொண்டிருந்த நிலைப்பாட்டில் இருந்து பாரியளவில் வேறுபாடில்லை .

Maash