Breaking
Sun. Nov 24th, 2024
வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்கும் வடக்கு மாகாண தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கங்களின் ஒன்றிய நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட சங்கங்களின் நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று யாழ் மாவட்ட செயலக கேட்ப்போர் கூடத்தில் கடந்த 07-05-2016 சனிக்கிழமை மாலை 03 மணியளவில் இடம்பெற்றது.

இவ்விசேட ஒன்றுகூடல் சுமார் மூன்று மணிநேரத்துக்கு மேலாக  இடம்பெற்றதாகவும், இதன்போது போக்குவரத்து தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக வெள்ளிக்கிழமை இணைந்த நேர அட்டவணை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் தனியார் போக்குவரத்துத் துறையினருக்கும் போக்குவரத்து அமைச்சருக்கும் இடையில் இவ் விசேட சந்திப்பு இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது முல்லை மாவட்ட தனியார் சங்கத்தால் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தது அக்கோரிக்கைகளை செவிமடுத்த அமைச்சர், குறித்த இணைந்த நேர அட்டவணை உடனடியாக அமுல்ப்படுத்தப்படவேண்டும் என்றும், வடக்கு மக்களுக்கு பாதுகாப்பானதும் சௌகரியமானதுமான சிறந்த போக்குவரத்தை வழங்க வேண்டியது நம்மொவ்வொருவருடயதும் கடமை என்று தெரிவித்ததோடு மேற்ப்படி இணைந்த நேர அட்டவணையானது அமுல்ப்படுத்தப்படுவதோடு ஒருமாத காலத்திற்கு குறிப்பாக ஏ 32 வீதி, முல்லைத்தீவு பரந்தன் வீதி, ஏ 9 வீதி ஆகிய பிரதான வீதிகளில் அமைச்சர் மற்றும் ஒருசில அதிகாரிகள் மற்றும் காவல்த்துறையினர் ஆகியோர் இணைந்து விசேட குழுவாக ஓர் கள ஆய்வை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், குறித்த ஆய்வின் போது பேரூந்துகள் சோதனையிடப்பட்டு அதில் பயணம் செய்யும் பிரயாணிகள் கணக்கெடுக்கப்பட்டு, ஒரு சில வழித்தடங்களில் அளவுக்கு அதிகமான பிரயாணிகள் ஏற்றவேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும் ஒருசில வழித்தடங்களில் மிகவும் குறைவான பயணிகளே இருப்பதாகவும் சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையிலேயே இவ்வாறான கள ஆய்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததோடு,fc30d42e-2dce-4267-a4ff-89ba9dc0c828

குறித்த இவ் நேரடி கள ஆய்வின் பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினரோடு கலந்துரையாடி அளவுக்கு அதிகமான பயணிகள் காணப்படும் வழித்தடங்களில் பேரூந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், குறைவான பயணிகள் உள்ள வழித்தடங்களில் உரிமையாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு பேரூந்துகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே வேளை இவ் இணைந்த நேர அட்டவணை அமுல்ப்படுத்துகின்றவேளை அனைத்து மாவட்ட சங்கங்களின் தலைவர்கள் உறுப்பினர்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு நல்கி செயல்ப்படுத்தவேண்டும் என்றும், அத்தோடு தலைவர்கள் இவ்விடயத்தில் சற்று கவனமாக நடந்துகொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார், அதே வேளை பல தலைவர்கள் விரைவில் இவ் இணைந்த நேர அட்டவனையை அமுல்ப்படுத்துமாறும் தாங்கள்  இதற்க்கு பூரண ஒத்துழைப்பு நல்குவதாகவும் தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது.

c5b42cdf-6ed2-4c67-a995-f27d26af8369

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *