வட புலத்தில் ஏற்பட்ட ஒரு காணிச்சர்ச்சையில் போதகர் ஒருவருக்கு உண்மையை உரத்துக்கூறியதை மரியாதைக் குறைவாக திரிவு படுத்தி அந்த ஆத்திரத்தை தீர்ப்பதற்கு ரிஷாத் பதியுதீனை எப்படியாயினும் பழி வாங்க வேண்டும் என்று துடியாய் துடித்து ஈஸ்தர் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி பதவி விலகுமாறு பலவந்தப்படுத்தி தேரரை ஏவி அந்த உண்ணாவிரதத்தையும் ஆசீர்வசித்து இன்றுவரை ரிஷாதை கைது செய்வதையே ஜெபமாக்கி ராஜபக்ஷக்களை நெருக்கிக்கொண்டிருக்கும் அதி மேன்மைக்குரியவரையும் அவரை தூண்டிவிடும் டயஸ்போராவையும் தோல்வியடைய வைக்க வேண்டும்.
சர்வதேச,உள்ளூர் விசாரனைகளினூடாக
கிட்டத்தட்ட நிரூபணமாகிய எக்கச்சக்கமான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் பௌத்த தேசத்தின் தலைவன் கோத்தாதான் என்று சிங்கள மக்கள் ஓர்மித்து நிரபராதி என தீர்ப்பளித்துவிட்டார்கள்.
மக்கள் தீர்ப்பே உயர் தீர்ப்பு.
இரும்பு,கொட்டைப்பாக்கு,செம்பு விற்பதெல்லாம் நாட்டையே விற்கும் அரசியலில் சப்பை மேட்டர்கள்.
அந்த குற்றச்சாட்டுக்களை குப்பையில் கொட்டுங்கள்.
ரிஷாத் அதிகாரத்தில் இருக்கும்வரை வட புலத்தில் முஸ்லிம்களின் தடங்களை இல்லாமலாக்க முடியாது,
வடக்கு தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல.
முஸ்லிம்களுக்கும் அதில் பங்குண்டு .
வடக்கின் இறுதிச்சாட்சியம் ரிஷாத் பதியுதீன்.
அஷ்ரஃபை கொன்றுவிட்டால் முஸ்லிம் தேசியம் சிதைந்துவிடும் என நினைத்த டயஸ்போராக்களுக்கு ரிஷாதின் துணிவை சகிக்க முடியவில்லை.
ஆட்சிமாற்றங்களுக்கு உதவியதற்காகவும் உதவாததற்காகவும் ரிஷாத் மீது ராஜபக்ஷ்க்கள் கோபத்துடன் இருக்கின்றார்கள் என்பதும் உண்மைதான்.
ஆனால் அது அதே அதிகாரத்துக்காக மறக்கடிக்கப்படும்.
இதெல்லாம் அரசியல் பாலகர்களுக்கு புரியாது.
மிகப் பெரிய சதித்திட்டம் ஒன்று டயஸ்போராவினால் ரிஷாதுக்கு எதிராக பின்னப்பட்டுள்ளது.
அதன் இலங்கை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் என்பதை நுன்னியமாக நோக்குவோரால் மட்டுமே கண்டு கொள்ள முடியும்.
ராஜப்க்ஷ்க்கள் அரசியல்வாதிகள். அவர்கள் இனவாதம் பேசுவது அதிகாரத்துக்காகவேயன்றி வேறில்லை.
தேவையேற்பட்டால் பிரபாகரனையும் அணைப்பார்கள்.
ரிஷாதையும் அணைப்பார்கள்.
ஆனால் வட புலத்துக்கு முஸ்லீம்கள் மீள வரக்கூடாது என்ற பிடிவாதத்துடன் தேவனின் சேவகர்களையும் தூண்டி ரிஷாதுக்கு எதிரான தீயை அணையாமல் வைத்திருப்பதெல்லாம் டயஸ்போராக்கள்தான்.
மேலோட்டமான அரசியல் பார்வையில் ராஜபக்ஷ்க்கள்தான் ரிஷாதை எதிர்க்கின்றார்கள்.
அந்தரங்கத்தில் ராஜபக்ஷ்க்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள்.
சதோச வாகனத்தில்தான் ஸஹ்ரானுக்கு ஆயுத விநியோகம் நடந்தது என்று கூறவைத்தது யார்?
அதில் ஒரு துளி உண்மையிருந்தால் இன்னேரம் ரிஷாதை சிலுவையில் ஏற்றியிருப்பார்கள்.
எல்லோரையும் சமாளிக்கலாம்.
ரிஷாதை சமாளிக்க முடியாது
ஆகவே ரிஷாதின் அரசியல் அடையாளத்தை அழிக்க வேண்டும்.
இது டயஸ்போராவின் நீண்ட கால திட்டம்.
ராஜபக்ஷ்க்களுக்கல்ல, டயபோராக்களின் சிம்ம சொப்பனம் ரிஷாத் பதியுத்தீன்
டயஸ்போராக்களின் திட்டத்தை முஸ்லிம்கள் முறியடிக்க வேண்டும்.
இந்த தேர்தலில் 100% முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ரிஷாதை ஆதரிக்க வேண்டும்.
-வஃபா பாறுக்-