பிரதான செய்திகள்

வடக்கு, கிழக்கில் மொட்டு சின்னத்தை கைவிடும் பொதுஜன பெரமூன! இறுதி தீர்மானம் வியாழன்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் மொட்டுச் சின்னத்தைக் கைவிட்டு வேறு சின்னத்தில் போட்டியிடுவதற்கு பொது ஜனபெரமுன தரப்பு ஆலோசித்து வருகின்றது.


எதிர்வரும் வியாழக்கிழமை வேட்பாளர்கள் முடிவு செய்யப்படவுள்ள அதேவேளை, வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் மாற்றுச் சின்னம் ஒன்றை உபயோகிப்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.


ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லாஹ், கருணா அம்மான், டக்ளஸ் தேவானந்தா போன்றோர் பெரமுனவின் வடக்கு,கிழக்கு பங்காளிகளாக இருக்கின்ற அதேவேளை எப்படியாயினும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு பெரமுன தரப்பு வியூகம் வகுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு 75 ஆண்டுகளாக இலங்கையில் இல்லாத VAT வரி…

Maash

புலிகளின் புதையலை தேடிய பொலிஸார்

wpengine

அரச ஊழியர்களுக்கான சம்பளம் 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

wpengine