Breaking
Mon. Nov 25th, 2024

“கோப்பாப்பிலவு உட்பட வடக்கு, கிழக்கிலுள்ள காணிப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற நிதி அமைச்சின்; கட்டளைச் சட்டஙகளின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணைகள் மீதான விவாதத்தல் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கொண்டவாறு கூறினார்.

அமைச்சர் ஹக்கீம மேலும் கூறுகையில்,

“கோப்பாப்பிலவு காணிப் பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் எம்.பி. பேசியிருந்தார். நிலைமாறு கால நீதித்துறை செயல்பாடுகளை பொறுத்தமட்டில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுள் காணிப்பிரச்சினையும் உள்ளடங்குகின்றது.

வடக்கில் மட்டுமல்லாது, கிழக்கிலும் காணிப்பிரச்சினை காணப்படுகின்றது. குறிப்பாக போர்க்காலத்தில் கூட எவ்வித தடங்களுமன்றி பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலங்களில் போர் முடிந்த பின்னர் அங்கு விவசாய நடவடிக்கைளை தொடர அப்பிரதேச மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அம்பாரை மாவட்டத்தில் லஹுகல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரதெல்ல மேற்கு பகுதியில் பள்ளியடி வட்டை விவசாயிகள் அமைப்பு 151 ஏக்கர் நிலப்பரப்பில் (காணிகளில்) பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டு வந்த 63 – 75 குடும்பங்களுக்கு தற்போது அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 1978ஆம் ஆண்டிலிருந்து அவர்கள் அங்கு பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆகவே, மக்களின் இந்தக் காணி விவகாரங்களுக்கும் நிலைபெயர் கால நீதி நடவடிக்கைகளின் ஊடாக தீர்வு காணப்பட்டு இந்த மக்களுககுரிய உரிமைகள் மீள வழங்கப்பட வேணடும்.

எனினும், வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டு வனப்பாதுகாப்புத் திணைக்களத்தினால் அந்த மக்கள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வனப்பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் வனப்பாதுகாப்புப் பிரதேசமொன்று வர்த்தமானியில் மூலம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஒரு மாத காலத்திற்குள் பாராளுமன்றத்தில் அதற்கான அனுமதி பெறப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது காலாவாதியாகிவிடக் கூடிய சூழ்நிலை நிலவுகின்றது என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *