வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சின் 2014 ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை மூலம் நிதி ஒதுக்கப்பட்டு, மடு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நானாட்டான் பிரதேச சபையால் அமைக்கப்பட்ட, குஞ்சுக்குளம்
தொங்குபால சுற்றுலா மையத்தை 16-03-2016 புதன் நண்பகல் 12.30 மணியளவில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் திறந்து வைத்தனர்.
இன் நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் குருகுலராஜா ,வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,பிரிமுஸ் சிறைவா, குணசீலன் ஆகியோரும் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மடு பிரதேச செயலாளர் மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அத்தோடு அங்கே புனரமைக்கப்படவேண்டிய தொங்கு பாலத்தினையும் பார்வையிட்டனர்.


அத்தோடு அங்கே புனரமைக்கப்படவேண்டிய தொங்கு பாலத்தினையும் பார்வையிட்டனர்.

