பிரதான செய்திகள்

வடக்கும் கிழக்கும் தொடர்ந்தும் தனி மாகாணங்களாகவே இருக்க வேண்டும்.

இலங்­கையில் உத்­தேச அதி­காரப் பகிர்வில் வடக்கு – கிழக்கு மாகா­ணங்கள் தனித்­தனி மாகா­ணங்­க­ளா­கவே தொடர்ந்தும் இருக்க வேண்டும் என கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்­பு­களின் ஒன்­றி­யத்­தினால் பிர­க­ட­ன­மொன்று வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

தமிழ் மக்கள் பேரவை வடக்கு – கிழக்கு மாகா­ணங்கள் இணைந்த சமஷ்டி முறை­யி­லான அதி­காரப் பகிர்வை வலி­யு­றுத்தி தீர்­மானம் நிறை­வேற்றி 24 மணி நேரத்­திற்குள் கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்­பு­களின் சம்­மே­ளனம் இந்த பிர­க­ட­னத்தை தீர்­மா­ன­மாக நிறை­வேற்­றி­யுள்­ளது.

கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள மூன்று மாவட்­டங்­க­ளையும் சேர்ந்த முஸ்லிம் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் கல்­மு­னையில் ஒன்­று­கூடி தங்­களின் இந்தப் பிர­க­ட­னத்தை உள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச சமூ­கங்­க­ளிடம் முன் வைக்க முடிவு செய்­துள்­ளனர்.

ஒற்­றை­யாட்சி முறை­யி­லான அதி­காரப் பகிர்வு, தற்­போ­துள்ள ஜனா­தி­பதி முறை ஆகி­ய­னவும் அதி­காரப் பர­வ­லாக்கம் தொடர்­பாக அந்த பிர­க­ட­னத்தில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

வடக்கு – கிழக்கு இணைப்பு வேண்டாம்
வடக்கு – கிழக்கு இணைப்பை முஸ்­லிம்கள் ஒரு போதும் விரும்­ப­வில்லை. அந்த இணைப்பு முஸ்­லிம்­களை சிறு­பான்மை இன­மாக்கும். இன ரீதி­யான அநீ­திக்­குள்­ளாக்கும்.

முஸ்­லிம்கள் தனித்­து­வ­மான ஒரு தேசிய இனம். குறிப்­பாக கிழக்கு மாகா­ணத்தில் தனித்­து­வ­மான அடை­யா­ளத்தை கொண்­டுள்­ளனர். மட்­டு­மன்றி சுய நிர்­ணய உரித்­து­டை­ய­வர்­க­ளா­கவும் இருப்­பதால் அவர்­களை ஒரு தேசிய இன­மாக உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யது தவிர்க்க முடி­யா­தது.

சமஷ்டி முஸ்­லிம்­க­ளுக்கு பாதக­மா­னது
முஸ்­லிம்­க­ளுக்கு கடந்த காலங்­களில் ஏற்­பட்ட உயிர், உட­மை­களின் இழப்­புக்­களின் அடிப்­ப­டையில் ஒற்­றை­யாட்­சியே அவர்கள் விரும்­பு­கின்­றார்கள். சமஷ்­டியை தங்­க­ளுக்கு பாத­க­மா­கவே கரு­கின்­றார்கள்.

ஜனா­தி­பதி முறைமை தொடர வேண்டும்
தற்­போ­தைய ஜனா­தி­பதி முறைமை தொடர்ந்தும் இருக்க வேண்டும் என தனது பிர­க­ட­னத்தில் வலி­யு­றுத்­தி­யுள்ள கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்­பு­களின் சம்மேளனம்

தமிழ் – முஸ்லிம் விவகாரங்களை கையாளக் கூடிய அதிகாரம் கொண்ட இரு துணை ஜனாதிபதிகள் இடம்பெறுவதை அரசியல் யாப்பு உறுதி செய்ய வேண்டும் என்ற யோசனையையும் முன் வைத்துள்ளது.

Related posts

நான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன்! ரணிலுடன் இணைந்து நாட்டை முன்னேற்ற வேண்டும்- கோத்தா

wpengine

தாயே! பிள்ளைகளின் முதல் ஆசான் அ.இ.ம.கா. கல்முனை அமைப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி

wpengine

இரண்டு பட்டனை கழட்டிவிட்ட நடிகை! கவர்ச்சி படம் வெளியானது.

wpengine