பிரதான செய்திகள்

வடக்கு,கிழக்கு இணைப்பு! கிழக்கு முஸ்லிம்களின் இணக்கப்பாட்டுடன்தான் ஹக்கீம்

வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் இடைக்கால அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை கூட்டமைப்பின் யோசனை மாத்திரமே என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த விடயத்தினை பெரிதுப்படுத்திக்கொண்டு வடக்கு, கிழக்கை இணைக்கப் போவதாக தென்பகுதி அரசியல்வாதிகள் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசமைப்பு நிர்ணய சபை குழுவின் இடைக்கால அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இடைக்கால அறிக்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யோசனையை முன்வைத்துள்ளது.

இது வழிநடத்தல் குழுவின் நிலைப்பாடு அல்ல. இது கூட்டமைப்பின் தனிப்பட்ட கருத்தாகும். எனினும். இதனை சிலர் பெரிதுப்படுத்திக்கொண்டு தெற்கில் பிரசாரங்களை முன்னெடு வருகின்றனர்.

கூட்டமைப்பு யோசனையை மட்டுமே முன்வைத்துள்ளது. எனினும். வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது கிழக்கு, முஸ்லிம் மக்களின் இணக்கப்பாட்டுடன்தான் மேற்கொள்ளப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

37 இராஜாங்க அமைச்சர்களுக்கு எரிபொருள்,வாகனம் தொடர்பான புதிய பிரச்சினை

wpengine

அதிகாரம் இருந்தும் மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்காத டக்ளஸ் – குற்றம் சாட்டும் சாணக்கியன்!

Editor

அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கை

wpengine