நீண்டகாலத்துக்குப் பின்னர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசமைப்பொன்றை உருவாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் லக்ஸமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு இணைப்பு கைவிடுதல், ஒற்றையாட்சி மற்றும் பௌத்த மதத்துக்கு முன்னுரிமையளித்தல் போன்ற விடயங்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசமைப்பில் ஒரு சரத்துகூட இதுவரை உருவாக்கப்படவில்லை. ஆனால், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை இல்லாது ஒழிக்கப்படுகின்றது எனப் பல்வேறு பொய்ப் பிரசாரங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
அரசமைப்பு தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டு அது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும். பின்னர் மகாநாயக்க தேரர்களின் கருத்துகள் கோரப்படும்.
எனவே, நீண்டகாலத்துக்குப் பின்னர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசமைப்பொன்றை உருவாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் லக்ஸமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.