பிரதான செய்திகள்

வடக்கு,கிழக்கில் எங்கு மலைகளைக்கண்டாலும் புத்தரை அமரவைப்பதுதான் அவரது வேலை

புத்தசாசனம், மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஓர் இனவாதியென தெரிவித்த இரா. சாணக்கியன், வடக்கு,கிழக்கில் எங்கு மலைகளைக்கண்டாலும் புத்தரை அமரவைப்பதுதான் அவரது வேலையாகும் என்றார்.

தொல்லியல்  திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகளை நிறுத்தாவிட்டால் இனவாத அமைச்சர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வர முடியாத நிலையை ஏற்படுத்தி முடக்குவோம் என்றார்.

பாராளுமன்றத்தில் நேற்று (04) செவ்வாய்கிழமை உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு குசலானமலைக்கு நீங்கள் (விதுர விக்கிரமநாயக்க) வந்த போது மக்கள் உங்களை விரட்டியடித்தார்கள்,அதனால் தான் குசனாலமலையில் இன்று சைவ மத வழிபாடுகள் இடம்பெறுகின்றன .

 வவுனியாவில் வெடுக்குநாறிமலையில் பிரச்சினை,முல்லைத்தீவில் குருந்தூர் மலையில் பிரச்சினை,மட்டக்களப்பில் குசலானமலையில் பிரச்சினை தற்போது திருகோணமலையில் அரிசி மலையில் பிரச்சினை  பிரச்சினைகளை தோற்றுவிக்கும் செயற்பாடுகள் மாத்திரமே உங்களால் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்..

இதற்கு பதிலளித்த  புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஒருவர் எமக்கு பரிசொன்றை வழங்கினால் அதனை நாம் ஏற்காவிட்டால்,அந்த பரிசு உரிய தரப்பினருக்கு சொந்தமாகும் என்றார்.

Related posts

மக்கள் பிரச்சினைகளை தீர்க்க நேரடியாக சந்தித்து பேச வேண்டும் வவுனியா கூட்டத்தில் அமைச்சர் றிஷாட்

wpengine

ஜனாதிபதி மனம் வைத்தால் எதிர்க்கட்சிகளின் இந்த சதிகளை முறியடிக்கும்

wpengine

வில்பத்து பாதுகாப்பு தொடர்பில் மன்னாரில் கலந்துரையாடல்

wpengine