பிரதான செய்திகள்

வடக்கில் மீண்டும் புலிகளின் ஆதிக்கம் தேரர்

வடக்கில் மீண்டும் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் மேலோங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இராவணபலய அமைப்பின் தலைவர் இத்தாகண்தே சாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புலம் பெயர் அமைப்புகளுக்கு நாட்டின் வழங்களை விற்கும் நடவடிக்கையினை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “தற்போது நாட்டில் முக்கிய அரச நிறுவனங்களை வெளிநாட்டவர்களுக்கு குறிப்பாக புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு வழங்க மத்திய வங்கியின் ஆளுநரும், நிதியமைச்சரும் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று வடக்கில் அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டை பிரித்து தர வேண்டும் என்று தமிழ் அரசியல்வாதிகள் அரசாங்கத்துக்கு தொடர்ந்து அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர்.

இவர்களின் நோக்கம் நிறைவேற்றப்பட்டால் வடக்கில் மீண்டும் விடுதலை புலிகளின் ஆதிக்கம் மேலோங்கும். இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையையே விடுதலை புலிகளின் அமைப்பினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக அரச நிறுவனங்களையும் ஏனைய துறைகளையும் வெளிநாட்டவர்களுக்கு அரசாங்கம் விற்பனை செய்யும்போது அதனை மறைமுகமாக தம்வசப்படுத்திக் கொள்வதே இவர்களது பிரதான நோக்கம் என்றார்.

Related posts

வவுனியாவில் கிராம உத்தியோகத்தர்,அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது முறைப்பாடு

wpengine

கிளிநொச்சி இராமநாதபுரம் பழைய கண்டி வீதி புனரமைப்பு ஆரம்பம்

wpengine

இஸ்லாம் சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தருகின்றது – கெரி ஆனந்தசங்கரி

wpengine