பிரதான செய்திகள்

வடக்கில் மீண்டும் புலி­களின் ஆதிக்கம் தலை தூக்­கி­யுள்­ளது – விமல் வீர­வன்ச

வடக்கில் மீண்டும் புலி­களின் ஆதிக்கம் தலை தூக்­கி­யுள்­ளது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், விக்­கி­னேஸ்­வ­ரனும் வட­மா­காண சபை­யி­னரும் மட்­டுமே இன்று வடக்கின் பாது­காப்பை தீர்­மா­னிக்­கின்­றனர்.வெகு­வி­ரைவில் மீண்டும் புலம்­பெயர் புலி­களின் ஆதிக்கம் தலை­தூக்கும் என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்தார்.

மக்கள் பொறு­மை­யாக இருந்தால் புலி­களின் ஆதிக்கம் மீண்டும் தலை­தூக்கி நாட்டில் மீண்டும் பிரி­வி­னை­வாதம் உச்­ச­கட்­டத்­திற்கு வந்­து­விடும். ஆகவே மக்கள் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக வீதியில் இறங்கி போரா­ட­வேண்டும். விரைவில் மீண்­டு­மொரு பொதுத் தேர்­த­லுக்கு மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

 

தேசிய பாது­காப்பு விட­யத்தில் அச்சம் கொள்­ளத்­தே­வை­யில்லை என அர­சாங்கம் தெரி­வித்­துள்ள நிலையில் அது தொடர்பில் பொது எதி­ர­ணியின் நிலைப்­பாட்டை வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம் நாட்டை மிகவும் மோச­மான பாதையில் கொண்டு சென்­றுள்­ளது. நாட்டின் பொரு­ளா­தாரம் முழு­மை­யாக மோச­மான நிலையில் உள்­ளது. பொருட்­களின் வரி இரு­ம­டங்கு அதி­க­ரித்து சென்­றுள்­ளது. இன்­றைய நிலையில் விலை குறைக்­க­வேண்­டிய பொருட்கள் அனைத்­திற்கும் இரு­ம­டங்கு வரி அதி­க­ரித்து மக்­களின் வயிற்றில் நெருப்பை கொட்­டி­யுள்­ளனர். மக்கள் இன்று நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அபி­வி­ருத்­தி­க­ளையும் நன்­மை­க­ளையும் உணர ஆரம்­பித்­துள்­ளனர். கொடுத்த வாக்­கு­று­திகள் எல்லாம் இன்று காற்றில் பறந்­து­விட்­டன.

இன்று மஹிந்­தவை ஆத­ரித்த மக்­களை விடவும் நல்­லாட்­சியை ஆத­ரித்த மக்­களே அர­சாங்­கத்தை அதிகம் வெறுக்­கின்­றனர். இன்று மக்­களின் வெறுப்­பையும் கோபத்­தையும் கண்டு சிறி­சேன ரணில் அர­சாங்கம் அஞ்­சு­கின்­றது. உண்­மையில் மக்­களை கண்டு இவர்கள் அஞ்­ச­வில்லை என்றால் உட­ன­டி­யாக தேர்­தலை நடத்திக் காட்­டுங்கள். இப்­போது தேர்­தலை நடத்­தினால் இவர்­களின் பொய்கள், ஏமாற்று வேலைகள் அனைத்தும் வெளிப்­பட்­டு­விடும் என்­பது இவர்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும். அதனால் தான் பொய்­யான கார­ணங்­களை காட்டி தேர்­தலை பிற்­போ­டு­கின்­றனர்.

வடக்கில் இன்று என்ன நடக்­கின்­றது என்­பது சிங்­கள மக்­க­ளுக்கு தெரி­ய­வில்லை. தமிழ் பிரி­வி­னை­வாதம் இன்று தலை­தூக்­கு­கின்­றது, தற்­கொலை குண்­டுகள் வெளி­வர ஆரம்­பித்­துள்­ளன. இன்று வடக்கில் பாது­காப்பு இல்லை. இரா­ணு­வமோ, புல­னாய்வு பிரிவின் செயற்­பா­டு­களோ இல்லை. இன்று வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், விக்­கி­னேஸ்­வரன் வட­மா­காண சபையும் மட்­டுமே வடக்கின் பாது­காப்பை தீர்­மா­னிக்கும் தரப்­புக்கள். இவ்­வாறு நாட்டின் தேசிய பாது­காப்பு இருக்­கையில் நாடு அச்­சு­றுத்தல் இல்­லை­யென பாது­காப்பு செய­லாளர் கூறு­கின்றார் . இது தொடர்பில் விசா­ர­ணைகள் இல்லை ஆனால் ஜி.எல் பீரிஸ் சில கார­ணங்­களை கூறி­ய­தற்­காக அவரை விசா­ரிக்­கின்­றனர்.

நாட்டில் நடக்கும் பிரி­வி­னை­வாதம் நிறுத்­தப்­ப­டாது புலம்­பெயர் புலி­களின் தேவை சரி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. மறு­புறம் எமது புல­னாய்வு பிரிவின் முக்­கிய சிலர் சிறையில் அடைக்­கப்­பட்டு தண்­டிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். இரா­ணுவம் மீது போர்க்­குற்ற விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. ஐ.நா விசா­ர­ணை­யா­ளர்கள் இலங்­கைக்கு வந்­துள்­ளனர், இலங்­கையில் நடக்­க­வி­ருக்கும் விசா­ர­ணைகள் தொடர்பில் சரி­யாக ஆதா­ரங்கள் உரு­வாக்­க­ப­டு­கின்­றன. ஆனால் இந்த விவ­கா­ரங்கள் தொடர்பில் அனு­ர­கு­மார, சம்­பந்தன் ஆகி­யோ­ருக்கு தெரி­ய­வில்லை.

இந்த நிலைமை மாற­வேண்டும். ஆனால் அதற்கு இன்னும் நான்கு ஆண்­டுகள் காத்­தி­ருக்க முடி­யாது. மக்கள் பொறு­மை­யாக இருந்தால் புலி­களின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கி நாட்டில் மீண்டும் பிரிவினைவாதம் உச்சகட்டத்திற்கு வந்துவிடும். ஆகவே மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கி போராடவேண்டும். விரைவில் மீண்டுமொரு பொதுத் தேர்தலுக்கு மக்கள் அழுத்தம் கொடுக்க முன்வரவேண்டும். அப்போதுதான் நாட்டில் மீண்டும் ஜனநாயக ஆட்சியை உருவாக்கவும் தேசிய தாதுகாப்பை பலப்படுத்தவும் முடியும் என்றார்.

Related posts

கூட்டமைப்பின் சமகால அரசியல் தொடர்பில் மன்னாரில் கூட்டம்

wpengine

மீள்குடியேற்ற செயலணி! பாரூக் வடபுல முஸ்லிம் சமூகத்திற்கு வரலாற்று தூரோகத்தை செய்ய தூண்டுகின்றார்.

wpengine

மார்பகத்தை இழந்த பெண்! முன்னரை விட நான் இப்போது சந்தோஷம்

wpengine