பிரதான செய்திகள்

வடக்கில் தேசிய கொடியை இறக்கிவிட்டு, கறுப்புக்கொடி என்பது தெற்கு மக்களின் உணர்வை தூண்டுவதாகும்.

கடந்த சுதந்திர தினத்தின்போது யாழ்.பல்கலைக்கழகத்தில் பிரதான கம்பத்தில் தொங்கவிடப்பட்டிருந்த தேசியக் கொடியை கீழே இறக்கி அதற்கு பதிலாக அங்கு கறுப்புக் கொடியை ஏற்றியமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும். 

வக்கிர குணம் உள்ளவர்களால் மாத்திரமே இவ்வாறு நடந்துகொள்ள முடியும் என பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,”அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, தெற்கில் இனவாதத்தை தூண்டுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.

அவ்வாறாயின் சுதந்திர தினத்தை நாட்டின் அனைத்து மக்களும் கொண்டாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் வடக்கில் மாத்திரம் தேசிய கொடியை இறக்கிவிட்டு, கறுப்புக்கொடி ஏற்றுவது என்பது தெற்கில் உள்ள மக்களின் உணர்வை தூண்டுவதாக அமையும்.

இவ்வாறு கறுப்புக்கொடி ஏற்றுவது, நாட்டுக்கு ஏற்படும் அவமரியாதை மாத்திரமல்ல. ஆங்கிலேயர்களிடமிருந்து நாட்டை மீட்பதற்காகவும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும் போராடிய இராணுவ வீரர்களுக்கு செய்யும் அகௌரவமாகும்.

வக்கிர குணம் உள்ளவர்களால் மாத்திரமே இவ்வாறு நடந்துகொள்ள முடியும்.

இதற்கு அனுமதி அளித்தமை தொடர்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மற்றும் அதன் நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும்.

விடயத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

யாழ். பல்கலைக்கழகம் ஏனைய பல்கலைக்கழகங்களை போன்று இந்த நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது.

எனவே இவ்வாறு நடந்துகொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினரை சந்தித்த ஹக்கீம்

wpengine

அரசு வெகுவிரைவில் கவிழும் என்பதேயே நாட்டில் இடம்பெறும் அரசியல் சம்பவங்கள் மூலம் உணர முடிகின்றது.

wpengine

பாத யாத்திரை: எதைப்பிடுங்கப் போகிறது

wpengine