பிரதான செய்திகள்

வடக்கில் தமிழ் தரப்பினரின் இனவாத துண்டு பிரசுரங்கள்.

வடக்கிலிருந்து சிங்களவர்களை வெளியேற்ற துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திலிருந்து அனைத்து சிங்களவர்களையும் விரட்டியடித்து, வடக்கினை தமிழர் தாயக பூமியாக மாற்றிய அமைக்க ஒன்றிணையுமாறு இந்த துண்டு பிரசுரத்தில் கோரப்பட்டுள்ளது.

ஒரு தரப்பினர் இந்த துண்டு பிரசுரங்களை வட மாகாணம் முழுவதிலும் விநியோகம் செய்துள்ளனர். தமிழர் தாயக பூமிக்காக போராடுவோம் என்ற தொனிப் பொருளில் எதிர்வரும் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று நடத்தப்பட உள்ளது.

இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு குறித்த துண்டு பிரசுரம் மூலம் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கிலிருந்து சிங்களவர்களை முழுமையாக வெளியேற்றி, பௌத்த விஹாரைகளை அகற்றி, தமிழர் தாயக பூமியை பாதுகாக்க வேண்டுமென துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

2019 ஆம் ஆண்டிற்கான கொடுப்பனவை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

wpengine

மார்பகத்தை இழந்த பெண்! முன்னரை விட நான் இப்போது சந்தோஷம்

wpengine

இலஞ்சம் கொடுக்கும் வேட்பாளர்கள்

wpengine