பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடக்கில் உள்ள பஸ்களுக்கான தீர்வு விரைவில்- அமுனுகம

வடக்கிலுள்ள தீவுகளுக்கான போக்குவரத்து சேவையை மேம்படுத்த விரைவில் நடவடிக்கை எடுப்பதாக பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்..

தீவகங்களில் தற்போது மிகப்பழைய பஸ்களே போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

புதிய பஸ்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவை கிடைத்தவுடன் அவற்றை தீவகங்களில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வடக்கில் போக்குவரத்திற்கான குழுவை விரைவில் ஸ்தாபித்து, அதற்கு தேவையான வசதிகளையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் பாடசாலை போக்குவரத்து சேவையில் பற்றாக்குறை நிலவுவதாகவும் கஷ்டப் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கான போக்குவரத்து சேவையை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் திலும் அமுனுகம மேலும் குறிப்பிட்டார்.

Related posts

அடுத்த ஜனாதிபதி எவர்? என்பது எல்லோர் மனதிலும் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

wpengine

அனுர சேனநாயக்கவிடம் மீண்டும் தீவிர விசாரணை

wpengine

தமிழ் தலைமைகளின் அரசியலமைப்பு தவிப்புக்கள்

wpengine