பிரதான செய்திகள்

வடக்கில் உள்ள குளங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஜப்பான் உதவி

மகாவலி அதிகாரசபையின் ஊடாக வடக்கில் உள்ள குளங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஜப்பான் அரசாங்கம் இன்று இணக்கம் தெரிவித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஜப்பான் நாட்டின் ஜெய்கா அபிவிருத்தி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஹனை மஜிப் உள்ளிட்ட ஐவர் அடங்கிய குழுவினர் இன்று யாழ் மாவட்டத்திற்கு உத்தியகபூர்வமாக விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இன்று மாகாண பணிப்பாளர் அலுவகத்திற்கு விஜயம் செய்த இக்குழுவினர், வடக்கில் தற்போதைய விவசாய நிலைமைகள் மற்றும் அவற்றின் ஊடாக விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் புனர்நிர்மாணம் செய்யப்படாத நிலையில் காணப்படும் குளங்களின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

ஜப்பான் நாட்டின் உதவியுடன் சுமார் 750 மில்லியன் ரூபா செலவில் இப்பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

இச்சந்திப்பில் மாகாண சபையின் உறுப்பினர்கள் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு செயற்றிட்ட அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

மன்னார் மக்களை ஏமாற்றும் நகை கடை உரிமையாளர்கள்

wpengine

இஸ்­லாத்­துக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட ஊர்­வ­லம்! காரால் அடித்து கொலை (வீடியோ)

wpengine

வெள்ளி கிழமை ஊரடங்கு சட்டம்! மீண்டும் 2மணிக்கு அமுல்

wpengine