அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

வடக்கில் இந்தியாவை மீறி எந்தவொரு நாட்டின் தலையீட்டையும் அனுமதிக்க மாட்டோம் “செல்வம் எம்.பி.”

வடக்கில் இந்தியாவை மீறி எந்தவொரு நாட்டின் தலையீட்டையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

சீனா, வடக்கிலே என்ன அர்தத்தோடு மீனவர்களை நாடுகிறது எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

இன்று (05) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த கால அரசாங்கங்கள் செய்கின்ற தவறுகளை சுட்டிக்காட்டும் நிலைமை இருக்காமல், உங்களை நம்பி மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

வடக்கு கரையோரப் பகுதிகளில் மீனவ சமூகம் தான் அதிகளவில் வாழ்ந்து வருகிறது. போர் காலத்திலும் சரி தற்போதும் சரி மிக பின்னோக்கிய நிலையில் உள்ளனர். அவர்களின் குழந்தைகளின் கல்வி நிலைமை வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளதால் அதில் அவதானம் செலுத்துமாறும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்திய இழுபை் படகு பிரச்சினை பூதாகரமாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவை மீறி இன்னொரு நாடு மூக்கை நுழைப்பதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளராக சிப்லி பாரூக் நியமனம்

wpengine

யாழில் மக்கள் கவனத்தை ஈர்த்த மாட்டுவண்டி பவனி!

Maash

மொட்டு கட்சியின் புதிய பாராளுமன்ற உறுப்பினர் பதவி பிரமாணம்

wpengine