ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்ஆகியோருடனான எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் அரசஅதிபர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
வடக்கின் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நாளை மறுதினம்திங்கட்கிழமை, முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கொழும்புக்கு ஜனாதிபதிஅழைத்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொள்ளவுள்ளார்.
வடக்கில் பாதுகாப்புத் தரப்பினரின் வசமுள்ள காணிகளின் விவரங்கள், அத்துடன்காணி தொடர்பான ஏனைய விவரங்களும் மாவட்ட அரச அதிபர்களிடமிருந்துபெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவை தொடர்பிலேயே இந்தச் சந்திப்பில்ஆராயப்படவுள்ளது.
இதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபையின்கடந்த அமர்வில் உரையாற்றும் போது, காணிகள் தொடர்பான விவரங்களைத் தனக்குவழங்குமாறு உறுப்பினர்களைக் கோரியிருந்தார்.
அத்துடன், அரச அதிகாரிகள் சிலர் காணிகள் தொடர்பில் வழங்கியுள்ள தகவல்கள்தவறானவை என்றும், எனவேதான் உறுப்பினர்களிடமிருந்து சரியான விவரங்களைக்கோரியிருந்ததாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்தச் சந்திப்பின் பின்னர், வடக்கில் காணி விடுவிப்புக்கானநடவடிக்கைகள் எடுக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.