உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

வடகொரியாவை மீரட்டும் பிரித்தானிய பிரதமர்

வடகொரியாவுக்கு எதிராக மேலதிக பொருளாதார தடைகள் விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

வடகொரியா ஜப்பானுக்கு மேலாக ஏவுகணை ஒன்றை செலுத்தி சோதனை நடத்தியுள்ள நிலையில் பிரித்தானிய பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்நிலையில், வடகொரியா முன்னெடுதுள்ள ஏவுகணை சோதனைகளை கட்டுப்படுத்த சீனா அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பிரித்தானிய பிரதமர் தெரேசா மே வெளியிட்டுள்ள கருத்துக்கு சீனா கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்றைய தினம் வடகொரியா சோதனைக்காக செலுத்திய ஏவுகணை ஒன்று ஜப்பானுக்கு மேலாக பயணித்திருந்தது.

குறித்த ஏவுகணை ஜப்பான் வான் பரப்பை கடந்து சென்றமையால் பதற்றமடைந்த அந்நாட்டு அரசு, உடனடியாக எச்சரிக்கை செய்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு உத்தரவிட்டிருந்தது.

எவ்வாறாயினும், வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதனை பொருட்படுத்தாது வடகொரியா தொடர்ந்தும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

GCE O/L, A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு 6 மாத கால பயிற்சிநெறி!

Editor

யாழில் பிறப்பு பதிவற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு!

Editor

இலங்கை மீதான வட கொரியாவின் இணையதள தாக்குதல்

wpengine