பிரதான செய்திகள்

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி! 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம்

நாடு முழுவதும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி படிப்படியாக நிலைபெற்று வருவதால், கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வளிமண்டலவியல்  திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம் என திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், காலை வேளையில், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பனிமூட்டமான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. 

Related posts

அடுத்த மாதம் முதல் அரை சொகுசு பஸ் சேவைகள் இரத்து!

Editor

ஓட்டமாவடிக் கோட்டத்தில் அரசியல் மயப்பட்டுப்போன கல்வியற்கல்லூரி ஆசிரியர் நியமனம்

wpengine

நீங்கள் ஒரு பட்டதாரியா? விண்ணப்பம் 31ஆம் திகதி இறுதி

wpengine