பிரதான செய்திகள்

வசீம் தாஜூடீன் கொலை! சிக்கப்போகும் ஷிராந்தி

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் கொலை வழக்கில், கொழும்பு முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர அரச தரப்பு சாட்சியாக மாற தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாஜூடீனின் உடற்கூறுகள் காணாமல் போனமை மற்றும் அதனை சைட்டம் நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றமை தொடர்பில் முன்னாள் சட்டவைத்திய அதிகாரியை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்ய உள்ளது.

இந்த நிலையிலேயே தாஜூடீனின் மரணம் குறித்த பிரேத பரிசோதனைகளை நடத்திய முன்னாள் சட்டவைத்திய அதிகாரி அரச தரப்பு சாட்சியாளராக மாறவுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல், தாஜூடீன் கொலை சம்பந்தமான சாட்சியங்களை மறைத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க, சம்பவம் தொடர்பான தன்னை மாத்திரம் நீண்டகாலம் விளக்கமறியலில் வைத்திருப்பது மிகப் பெரிய அநீதி என ஒரு முறை நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தாஜூடீன் கொலை தொடர்பான விசாரணைகளுக்காக கடந்த 27 ஆம் மற்றும் 28 ஆம் திகதிகளில் திணைக்களத்திற்கு சமூகமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அறிவித்திருந்தது.

எனினும் இந்த திகதிகளில் தம்மால் விசாரணைகளுக்கு சமூகமளிக்க முடியாது என இவர்கள் தமது சட்டத்தரணிகள் மூலம் அறிவித்திருந்தனர்.

தாஜூடீனின் கொலைக்கு ஷிரந்தி ராஜபக்சவின் சிரிய சவிய நிதியத்திற்கு செஞ்சிலுவைச் சங்கம் வழங்கிய டிபென்டர் வாகனம் பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஷிரந்தி ராஜபக்சவின் நேரடியாக உத்தரவின் பேரிலேயே அந்த வாகனம் வெளியிடப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக சிரிலிய சவிய நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களிடம் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Related posts

சிலாவத்துறை போதனாசிரியர் காரியாலயம் மூடுவிழா! உரிய அதிகாரி நடவடிக்கை எடுப்பாரா?

wpengine

அரச நிறுவனங்களில் பணியாற்றும் சேவையாளர்களின் அலுவலக நேரத்தில் மாற்றம்

wpengine

வவுனியா,மன்னாரில் குரங்கின் தொல்லை

wpengine