Breaking
Sun. Nov 24th, 2024

(புத்தளம் இப்னு ரஹ்மத்)
அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமம்
கொண்டு இதனை எழுத முனைகின்றேன்.

இன்றைய வட்அப் குழுமங்களிலும் ஒரு சில இணையத்தளங்களிலும் குவைதர்கான்
என்பவரின் அறிக்கைகள் தொடர்ச்சியாக வெளிவருவதை பார்க்கின்ற
போது,குவைதர்கான் இந்த நாட்டின் உயர குடும்பத்தில் பிறந்து இலங்கை நாட்டு
மக்களுக்கு என்னிடலங்காத பணிகளை செய்தவராக இருக்குமோ என்ற சந்தேகத்தினை
ஏற்படுத்தியது.இந்த நிலையில் இப்படிப்பட்ட நல்ல மனிதன் அமைச்சர் றிசாத்
பதியுதீன் அவர்களுக்கு எதிராக சுமத்திவரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்
அறிய வேண்டும் என்ற ஆவலுடன்,சில தேட்டல்களை செய்த போது இந்த குவைதர்கான்
யார் என்பதை அறிந்து கொண்டேன்,போதுமான மக்கள் ஆதராரங்களை மூலதானமாக
வைத்துக்கொண்டு இதனை எழுதுவது பொருத்தம் என கண்டதினால் சற்று தாமதித்து
எழுத வேண்டியேற்பட்டது.

அமைச்சராக இருக்கின்ற றிசாத் பதியுதீன் அவர்களின் பணிகள் தொடர்பில் எழுத
வேண்டிய தேவையில்லை என கருதுகின்றேன்.அவர் பற்றி இன்று வடக்கு மக்கள்
மட்டுமல்ல கிழக்கிலும்,ஏனைய மாவட்டங்களிலும் உள்ள மக்கள் கூறியதை
கேட்கின்ற போது அல்ஹம்துலில்லாஹ் என்று கூறியவனாக சிலரது காதுகளை அல்லாஹ்
செவிடாக்கி வைத்துட்டான் என்பதையும் பகுத்து அறிந்து கொள்ள முடிகின்றது
செவிடன் காதில் சங்கை ஊதினால் என்ன மாதிரி கணீர் என ஒலிக்குமோ அதை விட
இரு மடங்கு மேலாக இந்த குவைதர்கானின் காதுகளை அல்லாஹ் ஆக்கியுள்ளான்
என்பதற்கு போதுமான ஆதாரங்களை தொடராக இந்த ஊடகங்கள் மூலம் தெரிவிக்கும்
மக்கள் கருத்துக்களில் இருந்து அறிந்து கொள்ளவும் முடிகின்றது.

அமைச்சர் றிசாத் பதியுதீனின் அரசியல் வளர்ச்சி அதன் மூலம் குறிப்பாக
வடமாகாண மக்கள் பெற்றுக்கொண்ட நன்மைகள் தொடர்பில் நிறைய எழுதலாம்.ஆனால்
அது தேவைப்படுகின்ற போது தேவையானவர்களுக்கு எடுத்துரைக்கின்ற போது அது
அவர்களுக்கு உரைக்கும்,அதே போன்று அது உண்மை என்பதை அவர்கள் உரக்க
கூறுவார்கள்.ஆனால் இருட்டுக்குள் நின்று கொண்டு பொருட்களை
தேடுபவர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் உரைக்காது,ஏன் அவருக்கு அது
தொடர்பிலான மட்டமான அறிவு இருப்பதால் தான் என கருதுகின்றேன்.
அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக இந்த குவைதர்கான் லஞ்ச ஊழல்
ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்வதும் அதனை தொடர்ந்த ஊடக மாநாட்டினை
நடத்துவதன் வழமையான கூழுக்கு குப்பாடியாகவே இருந்து வரும்
நிகழ்வாகும்.இவரால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் லஞ்ச ஊழல்
ஆணைக்குழு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி ஆணைக்குழு முன் ஆஜராகி கருத்துக்களை
தெரிவிக்குமாறு கூறியதாக வட்ஸ் மூலம் அறியக்கிடைத்த்து.அதன் பிற்பாடு
இவரால் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையினை பார்க்கும் போது,ஆணைக்குழு
குவைதர்கானின் அறிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கையெடுப்பதாகவும் அமைச்சர்
றிசாத் பதியுதீன் குற்றமிழைத்தவர் என்று அறிக்கைவிடும் அளவுக்கு
ஆணைக்குளுவினையும் மிஞ்சி குவைதர்கான் பிரசாரம் செய்துவருவது
ஆணைக்குழுவின் செயற்பாடுகளினை மலினப்படுத்தும் ஒன்றாக நோக்கு அளவுக்கு
இவர் செயற்பாடு அமைந்துள்ளது.

குவைதர்கானின் முறைப்பாட்டின் பிரதானமானது,முசலி மக்களுக்கு வெளிநாட்டு
நிதி உதவி மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்பு திட்டம் தொடர்பானது.இந்த
குவைதர்கான் இது தொடர்பில் அறிந்து கொள்ள கொண்டுள்ள ஆர்வத்தின் பின்னணி
என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.முதலாவது இவர் இந்த முசலி
பிரதேசத்தினை சேர்ந்திருப்பவரா ?அல்லது மக்கள் வாக்கினால் தெரிவு
செய்யப்பட்ட பிரதி நிதியா ?அல்லது இப்பிரதேச மக்களுக்கு எங்காவது இருந்து
இருந்து அபிவிருத்தியினை கொண்டுவந்தவரா ? இதனையும் கடந்து அவரது
வகிப்பகம் என்ன என்பதை அறிய ஆவல் கொண்டுள்ளோம்.

இதற்கு அவர் வழங்கும் பதிலில் தான் இவரது எந்த செயற்பாட்டுக்கும் தேவயான
பதிலை வழங்க முடியும்.அதனை விடுத்து எங்கோ செல்லும் சனியனை இறக்கி அதற்கு
பூச்சூடி அழகு பார்க்க வேண்டிய தேவை எவருக்கும் இருக்காது.இந்த
குவைதர்கானுக்கு வழங்கு பதிலானது,அவரது அரசியல் பிழைப்புக்காக இடப்படும்
மூலதனம் என்பதில் எந்தவித மறைவுமில்லை.இந்த நிலையில் தான் இவரது முதலாவது
கேள்வியாக இருப்பது விடமைப்பு திட்டம்,அதேபோல் இதற்கான நிதி செலவு
விபரங்களை வெளிப்படுத்துமாறு கோறி செய்யப்பட்ட முறைப்பாடாகும்.இதற்கு
பதில் இலகுவானது,அமைச்சர் றிசாத் பதியுதீன் அரசியலுக்குள்பிரவேசித்து
இருபது வருடங்கள் ஆகின்றது.அல்லாஹ்வின் உதவியால் வன்னி மாவட்ட
தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக் தெரிவானது
மட்டுமல்லாது, வட மாகாண சபையில் 3 மாகாண சபை பிரதி
நிதித்துவத்தையும்,தேசிய அரசியலில் 5 பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தையம்
பெற்றுக்கொண்டுள்ளதன் மூலம் இவர் தொடர்பில் இந்த நாட்டு மக்களின்
நம்பிக்கைக்குரிய ஒரு அரசியல் தலைவராக இருப்பது இந்த
குவைதர்கானுக்கும்,அவரது பின்னின்று இயக்கும் மாபியாக்களுக்கும் நெஞ்சு
வெடிக்கும் செய்யாகவே இருக்கின்றது.

வடக்கில் இருந்து புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் ஒருவராக
அமைச்சர் றிசாத் பதியுதீன் இருக்கின்றார்.அவருக்கு தேவை இருக்கின்றது
அவர் வாழ்ந்த மண்ணை மீட்டு அதில் அங்கு வாழ்ந்த மக்களை
மீள்குடியேற்ற.எனவே 23 வருட இடம் பெயர்வினால் அழிந்து போன அனைத்தையும்
புனரமைப்பு மற்றும் புதிய நிர்மாணம் செய்ய,அதற்காக உலக முஸ்லிம்
நாடுகளிடத்தில் நேர்மையான முறையில் விடயங்களை எடுத்துரைத்து அந்த
நாடுகளின் உதவியினை பெற்று மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுத்து
இன்று அம்மக்கள் தமது வீடுகளில் கௌரவமாக வாழும் நிலையினை
ஏற்படுத்தியுள்ளார்.அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளிநாடுகளிடம் விடுத்த
வேண்டுகோளின் பேரில் வழங்கப்பட்ட நிதியினை உரிய நிறுவனத்திற்கு
வழங்கப்பட்டு அது அவர்களினால் மேற்பார்வை செய்யப்பட்டு விடுகள்
நிர்மாணித்த்த்தன் பின்னர் அதற்கான உறுதிகளும் மக்களிடம்
வழங்கப்பட்டுமுள்ளது.இந்த வீடுகளை பெற்றுக்கொண்ட அல்லாது பெற்றுக கொள்ளாத
மக்கள் எவ்வித முறைப்பாடுகளையும் செய்யாத நிலையில் குவைதர்கான் மட்டும்
இது தொடர்பில் கூக்குரலிடுவதன் பின்னணி தான் அமைச்சர் றிசாத் பதியுதீனின்
அரசியல் வளர்ச்சியினை தாங்கிக் கொள்ள முடியாத மற்றுமொரு அரசியல் கட்சி
இவருக்கு கொடுக்கும இலவச இணைப்புக்களும்,கொடுப்பனவுகளும் என்பதை மக்கள்
நன்கு அறிவார்கள்.இந்த குவைதர்கான் இது தொடர்பில் செய்துள்ள
முறைப்பாட்டுக்கு தேவையான பதில் உரிய இடத்திற்கு இவர் கேட்பதற்கு
முன்னரே வழங்கப்பட்டுவிட்டது.கணக்காய்வு அறிக்கைகள் கூட இதற்கு
போதுமானஆதாரங்களாகும்.இந்த கேள்விகளுக்கு குவைதர்கானுக்கு பதில் வேண்டும்
என்றால் அரசியல் வார்த்தைகளால் அரசியல் மேடைகளில் வெகுவிரைவில் முசலி
மக்கள் வழங்க தயாராக இருக்கின்றார்கள் என்பதை அவருக்கு சொல்லி வைப்பதில்
மகிழ்ச்சியடைகின்றேன்.இந்த நாட்டில் அகதிகளாக வாழும் தமிழ் மற்றும்
முஸ்லிம் மக்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் அரசியல் தலைமையினை
ஏற்றதன் பின்னர் செய்துள்ள பணிகளானது இலங்கை அரசியல் வரலாற்றி எந்தவொரு
அரசியல் வாதியும் இது வரைக்கும் செய்திருக்கமாட்டார்கள் என்பதற்கு
போதுமான ஆதாரங்கள் எம்மில் நிறைய இருக்கின்றன.குவைதர்கான் போன்றவர்கள்
தினந்தோறும் காலையில் எழும்புகின்ற போது அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு
எதிராக என்ன செய்யலாம்,இன்று அவர் பேச்சு வராமல் இருக்க எதையாவது புழுகு
மூட்டைகளை அவிழ்த்து விட்டு தான் வாங்கும் விஸ்வாசக் கொடுப்பனவுக்காக
மேற்கொள்ளும் குப்பைகளுக்கெல்லாம் பதிலிருக்க வேண்டியுள்ளது.அவ்வாறு
மௌனித்தால் இவர் போன்ற ஜால்ரா ஆசாமிகள் மக்களை பிழையாக வழிநடத்த
நேரிட்டுவிடும் என்ற அச்சமும் எம்மில் காணப்படுவதால் தான் இதனை
எழுதுகின்றோம்.

அரசாங்கம் அதனது வேளையினை செய்யும்,அமைச்சர்கள் அவர்களது பணிகளை
செய்வார்கள்,மக்கள்அவர்களுக்கு தேவையானதை பெற்றுக்கொள்ளும் முயற்சிகளை
செய்வார்கள்,அதே போல் சமூகத்தின் புல்லுருவிகள் குழப்பத்தினை
ஏற்படுத்துவார்கள் அதற்காகத்தான் அவர்கள் கட்சிகளிலிருந்து சன்மானம் என்ற
பெயரில் கூலிகளை பெற்று அதற்காக வக்காளத்து வாங்க இப்படியான போலி
குற்றச்சாட்டுக்களையும்,அதற்கு சமர்ப்பிக்க டிப்டொப் ஆசாமியாக பைத்தியம்
போல் அலைவார்கள் .இதற்கு இந்தநபரும் உள்ளீரக்கப்பட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *