இலங்கையின் வடகிழக்கில்,வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அதேவேளை, நட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை தொடந்த்தும் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்து வரும் நாட்களிலும் வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்குமென்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மற்றம் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பதிவாகக்கூடும் எனவு மேற்கு சப்ரகமுவ மத்திய மாகாணங்களில் காலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும் அதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.