பிரதான செய்திகள்

லெப்டினன் யோஷித இடைநிறுத்தம்; சம்பளமும் படிகளும் நிறுத்தம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரும் கடற்படையில் லெப்டினன் தரத்தில் கடமையாற்றியவருமான யோஷித ராஜபக்ஷ, கடற்படைச் சேவையிலிருந்து இடைநீக்கப்பட்டுள்ளார் என்று கடற்படை அறிவித்துள்ளது.

28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலுக்கு வரும்வகையில் இவர், இடைநீக்கப்பட்டுள்ளார் என்று கடற்படை அறிவித்துள்ளது. பணமோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சுயாதீனமான விசாரணைகளுக்கு வழிசமைக்கவேண்டுமென நிதிக் குற்ற விசாரணைப்பிரிவு கேட்டுக்கொண்டமைக்கு இணங்கவே, பாதுகாப்பு அமைச்சினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ‘அவருக்கான சம்பளம் மற்றும் படிகள் (கொடுப்பனவுகள்) யாவும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது’ என்று, கடற்படை பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்தார்.

இதேவேளை, ‘கடற்படைத் தலைமையத்தின் அனுமதியின்றி, நாட்டிலுள்ள எந்தவொரு கடற்படை வளாகத்துக்குள்ளும் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது’ எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இரு பெண்களை தாக்கிய எருமை: காத்தான்குடி மக்களால் கட்டுப்பாட்டுக்குள்..!

Maash

ரணிலின் சகோதரனின் தொலைக்காட்சி சேவைக்கு சீல்

wpengine

ரணிலின் நடவடிக்கை காரணமாக உட்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளது

wpengine