உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

லெபனான் நாட்டுக்கு எதிராக சவுதி அரேபியா போர் பிரகடனம்.

லெபனானுக்கு எதிராக சவுதி அரேபியா போரை அறிவித்திருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

லெபனான் பிரதமர் சாத் ஹரிரி, அண்மையில் சவுதி அரேபியா சென்ற நிலையில் தாம் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.

தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் தாம் பதவி விலகுவதாகக் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் சவுதி அரசாங்கத்தின் நிர்ப்பந்தத்தினாலேயே கஹரிரி பதவி விலகியதாக, லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா ஷியா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா குற்றம் சுமத்தியிருந்தார்.

சவுதியில் தங்கியுள்ள சாத் ஹரிரி நாடு திரும்ப வேண்டும் என லெபனான் நாட்டின் பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்துவருகின்றனர்.

லெபனான் பிரதமர் சாத் ஹரிரி சௌதி பதவி விலகலை அறிவித்து சில நாட்கள் கடந்துள்ள நிலையில், லெபனான் நாட்டுக்கு எதிராக சவுதி போர் பிரகடனம் செய்துள்ளதாக ஹசன் நஸ்ருல்லா குற்றம் சுமத்தியுள்ளார்.

சவுதி அரேபியா லெபனானுக்கு எதிராக இஸ்ரேலை தூண்டுவதாகவும், லெபனானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையில் ஈடுபட, இஸ்ரேலுக்கு பில்லியன் கணக்கிலான பணத்தை கொடுக்க சவுதி தயாராகி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related posts

களத்தில் றிஷாட் பொலிஸ் அதிகாரியுடன் வாய்தர்க்கம்

wpengine

அமெரிக்கா பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால்வை சந்தித்த அமைச்சர் றிசாட் (படம்)

wpengine

அரசின் பாதகமான நடவடிக்கைகளை தட்டிக்கேட்பன்! முசலி வட்டார பிரச்சினை கூட பேசி உள்ளேன் அமைச்சர் றிஷாட்

wpengine