பிரதான செய்திகள்

லன்சா மீது கை வைக்க மாட்டார்கள்! அவருக்கு எல்லாம் தெரியும் மைத்திரியின் அதிரடி முடிவு

அரசாங்கத்தை விமர்சித்த 24 மணித்தியாலங்களில் சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் நிமல் லன்சா சில நாட்களுக்கு முன்னர் அரசாங்கத்தை விமர்சித்து வந்த போதிலும் அவருக்கு “எல்லாம்” தெரியும் என்பதால் யாரும் அவர் மீது கை வைக்கவில்லை என்றார்.

இன்று (04) இடம்பெற்ற கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சந்தையில் விமர்சனம் செய்ததற்காக சுசில் நீக்கப்பட்டார். ஆனால், நிமல் லன்சா பல நாட்களுக்கு முன்பு அரசாங்கத்தை இன்னும் அதிகமாக விமர்சித்தார் என்றும் இரண்டு சிக்ஸர்களை விளாசியதாகவும் மைத்திரி தெரிவித்தார்.

அவர்கள் ஏன் லன்சா மீது கை வைக்க மாட்டார்கள் என்பதை நான் அறிவேன், ஏனென்றால் அவருக்கு எல்லாம் தெரியும்  என்று  கூறினார்.

Related posts

“மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசு துரோகிகள்” மாவை மகனிடம் விசாரணை. !

Maash

பஸ் கட்டணங்கள் குறையும் சாத்தியம்!

Editor

தெலியாகொன்னை பிரதேசத்திற்க்கு நிரந்தரமாக தாய்சேய் நிலையம் அஷார்தீன் மொய்னுதீன்

wpengine