அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

லசந்த விக்ரமதுங்க கொலை விசாரணை தொடர்பாக ஆராய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு.

லசந்த விக்ரமதுங்க (Lasantha Wickrematunge) கொலை விசாரணை தொடர்பாக ஆராய சட்டமா அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட சி.ஐ.டி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயத்தை வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) இன்று (06) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

லசந்த விக்ரமதுங்கவின் கொலையில் சட்டமா அதிபரின் தலையீடு குறித்து தற்போது பலர் முதலை கண்ணீர் வடித்து வருவதாகவும் அமைச்சர் அதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல அரசாங்கங்களைக் கடந்து வந்தவர்கள்தான் இவ்வாறு முதலை கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பதாகவும், ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எப்போதும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த பாடுபடும் என்றும் அமைச்சர் வசந்த வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எந்த சூழ்நிலையிலும் கொலையாளிகளை விடுவிக்க அரசாங்கம் அனுமதிக்காது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பாடசாலை மாணவர்கள் ,மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்ச்சு விடுத்துள்ள எச்சரிக்கை.!

Maash

மன்னார் பிரதேச செயலகத்தில் Covid தடுப்பு

wpengine

விடுதலைப் புலிகள் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் சிறுவர்களை பலவந்தமாக கடத்தி சென்றார்கள்

wpengine