(ஏ. எச்.எம். பூமுதீன்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்- அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் பாராளுமன்ற உரை மிகப் பெரும் உணர்வலையை முஸ்லீம் சமூகத்துக்குள் ஏட்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்கள் , இணைய செய்தி தளங்கள் என ரிஷாத் பதியுதீனின் உரை ஆட்கொண்டிருந்தது.
கட்டார் நாட்டுடன் – சில மத்திய கிழக்கு நாடுகள் இராஜதந்திர உறவை துண்டித்துக்கொண்ட செய்திக்கு இணைய ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவத்துக்கு சமனாக றிஷாத்தின் பாராளுமன்ற உரைக்கும் அவைகள் முக்கியத்துவம் வழங்கி இருந்ததை அவதானிக்க முடிந்து இருந்தது.
அமைச்சர் ரிஷாத்- தனது பாராளுமன்ற உரையின் போது, நல்லாட்சியை கடும் சொற்களால் கடுமையாக சாடினார்.ஞானசாரவின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுவதை அடக்க முடியாத அரசு, போலீஸ் என்று பச்சையாக குத்தம் சுமத்திய அவர்- முஸ்லீம் இளைஞர்கள் பொறுமையின் எல்லையை தாண்டிவிட்டனர் என்றும் ஆதங்கப்பட்டார்.
குறுகிய காலத்துக்குள் அழிக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்களை பட்டியலிட்ட அமைச்சர் ரிஷாத்- தமிழ் இளைஞர்களைப்போல் முஸ்லீம் இளைஞர்களையும் ஆயுதம் தூக்க செய்யவா இந்த அரசு முயல்கிறது என்றும் ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பினார்.
சிங்கள அரசியல் தலைவர்கள் புடைசூழ இருந்த அந்த சபா மண்டபத்தினுள் அமைச்சர் ரிஷாத் தனித்து நின்று கர்ச்சித்த விதம் – முஸ்லிம்கள் மத்தியில் உணர்ச்சியை தூண்டியது. இளைஞர்கள் வெகுண்டெழுந்தனர்.
மர்ஹூம் அஷ்ரபுக்கு பிட்பாடு., பாராளுமன்றில் மிக ஆக்ரோஷமாக கர்ச்சித்த ஒரேயொரு தலைவன் என அவர்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டனர். இவ்வாறு நமக்காக பேசும் ரிஷாதுக்கு எந்தவொரு அநீதியும் ஏட்பட்டுவிடக்கூடாது என்பதிலும் அக்கறை கொண்ட அவர்கள், பிரார்தனையிலும் ஈடுபட்டனர்.
“முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பது என்பது வேறு, சபைக்குள் தன்னந்தனியாக நின்று கற்சிப்பது வேறு. அஷ்ரபுக்கு பிறகு இன்று ரிஷாத்தை தான் கண்டேன்”” என்கிறார் முஸ்லீம் காங்கிரசின் எம்பி ஒருவர். 2000 ஆம் ஆண்டு பாராளுமன்றில் மர்ஹூம் அஷ்ரப் மூன்றரை மணி நேரம் ஆறிய உரைக்கு பின்னர், அவ்வாறானதொரு உரையை 17 வருடங்களின் பின்னர் றிஷாத்தின் மூலம் உணர முடிந்தது என்றும் கூறிய அவர், “” நான் சொன்னேன் என்று எழுதி விடாதீர்கள், ஹக்கீம் பழிவாங்கிவிடுவார்” என்றும் கூறி வேறு பேச்சுக்கு திசைதிருப்பிக் கொண்டார்.
(பாவம் அவர்)
இவ்வாறு, கட்சி, பிரதேசம் தாண்டி அணைத்து தரப்பினராலும் கவரப்பட்ட, சமூக உணர்வுமிக்க பேச்சாகவே அமைச்சர் றிஷாத்தின் உரை இடம்பெற்றிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.