பிரதான செய்திகள்

றிஷாதை இகழ ஹக்கீமின் அங்கீகாரத்துடன் ஒரு அணி களமிறக்கம் பல இணையதளம்,முகநுால்

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)

அமைச்சர் றிஷாத் எது செய்தாலும் அதனை விமர்சித்தல்,அமைச்சர் றிஷாத் ஊழல் வாதியென பிரச்சாரம் செய்தல் ஆகிய பணிகளை செய்வோருக்கு அண்மைக்காலமாக மு.காவின் தலைவரிடமிருந்து கொள்ளை இலாபங்கள் கிடைப்பதாக அறிய முடிகிறது.

அண்மையில் அமைச்சர் ஹக்கீம் மு.காவின் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் வைத்து slmcputhiyavelichcham  எனும் பெயரில் ஒரு இணைய தளத்தையும்ஆரம்பித்துக்கொடுத்திருந்தார்.இவ் இணைய தளங்கள் அமைச்சர் றிஷாதை இகழ்வதையே பிரதான தொழிலாக செய்கிறன.(ஸ்கிறீன் சொட் இணைக்கப்பட்டுள்ளது).unnamed-2

அண்மையில் அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு முகநூலில் பிரச்சாரம் செய்வோர் அனைவரையும் அழைத்துக்கொண்டு  நுவரலியா சென்றிருந்தார்.இங்கு சென்றிருந்தவர்கள் அனைவரும் முக நூலில் மு.காவை புகழ்பவர்களும்,அமைச்சர் றிஷாதை இகழ்பவர்களுமாகும்.இதன் மறு பொருள் அமைச்சர் ஹக்கீம் மு.காவின் போராளிகளுக்கு அமைச்சர் றிஷாதை இகழ்வதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளார் என்பதாகும்.

 

அங்கு சென்று வந்த சிலர் அமைச்சர் ஹக்கீமின் பண்பை கண்டு வியந்துவிட்டதாக பதிவிட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.நாலு பேர் பார்த்துக்கொண்டிருந்தால் எல்லோரும் இப்படித்தான் என்பதை அறியாதளவு சிலர் இருப்பது வேதனைக்குரிய விடயம்.சுபஹு தொழும் அமைச்சர் ஹக்கீம் மகாநாயக்க தேரர்களை வணங்குவது எந்த இஸ்லாத்தில் உள்ளது? கிளப்புகளில் நடனமாடுவது எந்த இஸ்லாத்தில் உள்ளது? அமைச்சர் பதவியை பெறும் போது கும்பிடுவது எந்த இஸ்லாத்தை சேர்ந்தது? இதனை ஒரு முஸ்லிம் நிராகரித்து பேசுவானாக இருந்தால் கூட அவனை முஸ்லிம் எனக் கூற இயலாது.

 

இதே சுற்றுலாவை அமைச்சர் றிஷாத் ஏற்பாடு செய்திருந்தால் இச் சுற்றுலா சென்றவர்கள் அதிகமானவர்கள் நக்குத்திண்ணிப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருப்பார்கள்.அண்மையில் நான் அமைச்சர் றிஷாதிடம் ஒரு குறித்த சமூக விடயத்திற்காக உதவி கோரி சென்ற போது,அவர் எங்களை தனது வாகத்தில் அழைத்துச் சென்றார்.இந்த பண்பாட்டை புரிந்து கொள்ளாது  அவர் எங்களு சுற்றுலா அழைத்து சென்றதாக பிரச்சாரம் செய்தவர்கள் தான் இந்த சுற்றுலா சென்றவர்களில் அதிகாமனவர்கள்.அது மாத்திரமல்ல அமைச்சர் றிஷாத் ஏற்பாடு செய்த ஊடக மாநாட்டில் உணவுண்டு கொண்டிருந்த ஊடகவியலாளர்களை புகைப்படம் பிடித்து கேவலாமாக பதிவிட்டவர்கள் தான் இதில் உள்ளவர்கள்.இவர்கள் தான் மு.காவிற்கு எதிராக யாரும் எழுதினால் மஞ்சள் கவர் என பிரச்சாரம் செய்வோர்.இவர்களுக்க் மஞ்சள் கவர் எனக் என்ன அருகதை உள்ளது? அமைச்சர் ஹக்கீம் இவ்வாறானவர்களை தன்னுடன் வைத்திருப்பது அவர்களுக்கு அங்கீகாரம் வழங்குகிறார் என்ற பொருளைஎ வழங்குகிறது.

 

குறித்த நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்றவர்கள் மரம் நடச் சென்றார்களாம்.குறித்த பிரதேச ஆதவாளர்களை கொண்டே மு.கா மரம் நடும் விடயத்தை செய்து வருகிறது.அமைச்சர் ஹக்கீம் நுவரலியாவில் மட்டுமேன் முகநூல் போராளிகளை களமிறக்கினார்? அங்கு மரம் நட ஆள் இல்லையா? குறித்த சுற்றுலாச் சென்ற போராளிகளில் ஒருவர் அங்கிருந்த மக்கள் மு.காவிற்கு அமோக வரவேற்பு வழங்கியதாக கூறியுள்ளார்.இதிலிருந்து இது ஆளில்லாமல் நடந்ததல்ல என்பதை விளங்கிக்கொள்ளலாம்.ஆட்கள் இல்லை என்றால் பணம் கொடுத்து ஆட்களை எடுத்திருக்க முடியும்.இவற்றிலிருந்து இது அமைச்சர் ஹக்கீமின் அமைச்சர் றிஷாதை இகழும்  மு.காவின்  முகநூல் போராளிகளுக்கான ஒரு ஒப்பர் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

 

நீங்கள் இலவசமாக நுவரெலியாவிற்கு சுற்றுப்பயணம் செல்ல வேண்டுமா ? அமைச்சர் றிஷாதை இகழுங்கள்.unnamed-3

 

குறிப்பு: இவ்விமர்சனங்களில் சம்பந்தப்பட்டவர்களில் அதிகமானவர்கள் என்னுடன் நெருங்கியவர்கள் என்பதால் இப் பதிவை மிகவும் கவலையுடன் எழுதுகிறேன்,நீங்கள் மற்றவர்களை கட்டுக் கதைகளுடன் இகழும் போது அதனை நீங்கள் அறியும் வகையில் உரிய நேரத்தில் சுட்டிக்காட்ட வேண்டிய கடமை எனக்குள்ளதாக உணர்ந்து இதனை எழுதுகிறேன்.நான் சுற்றுலாச் சென்ற அனைவரையும் குறிப்பிடவில்லை.சில நல்ல பண்புள்ளவர்களும் அதிலுள்ளனர்.

 

Related posts

மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலேயே அபிவிருத்தியின் திருப்தி தங்கியுள்ளது.

wpengine

மன்னார் மறை மாவட்ட ஆயரை சந்தித்த ஜம்மியத்துல் உலமா சபை

wpengine

தேசிய அரசாங்கத்தின் பணிகளை முன்னெடுக்க புதிய அமைச்சர்கள் தேவை! பைஸர் முஸ்தபா

wpengine