பிரதான செய்திகள்

றிஷாட் மீது போலிகளை பேசும் ஹக்கீம்,சிங்கள இனவாதம்

அகதி மக்களின் வாக்குகளால் அவைக்கு வந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அந்த மக்களின் அகதி வாழ்வுக்கு விடைகொடுக்க அந்த மக்களின் சொந்த இடத்தில் குடியேற்ற உதவி செய்தமையால் அன்று தொடக்கம் இன்றுவரை வில்பத்தை அழித்தார் விலங்குகளை கொண்டார் என்று பெருபான்மை சமூகத்திடம் குற்றவாளியாக காட்டி அமைச்சரின் அரசியல் செல்வாக்கை இல்லாமல் செய்ய இனவாதிகள் முனைப்புடன் செயற்பட்டுவருகின்றனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு இரு கூட்டத்தினர் அவர் மீது அபாண்டம் சுமத்துவதை தொழிலாக கொண்டு செயற்படுகின்றனர் ஒரு கூட்டம் நமது சமூகத்தில் இருக்கும் முஸ்லிம் சமூகத்தின் தலைமை என சொல்லும் ஹக்கீம் தலைமையிலான அணியினர் மற்றைய கூட்டத்தினர் இனவாத சிந்தனை மூலம் பெருபான்மை சமூகத்தை திசை திருப்ப முனையும் இனவாதிகள்.

அன்மையில் இந்தியாவில் சல்மான் கானுக்கு மானை கொண்டார் என்ற காரணத்திற்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டது இதை இந்த இனவாதிகள் இலங்கையில் இருக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனையும் ஒப்பிட்டு இனவாத சிந்தனையோடு முகநூல்களில் செய்திகளை பரப்பி சமூகத்தில் அவப்பெயரை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

ஏன் இப்படி அமைச்சர் மீது வீண்பழி சுமத்துவதை தொழிலாக கொண்டு செயற்படுகிறார்களோ தெரியவில்லை சமூகமே எமது தலைமைத்துவத்திற்காக ஒன்றுபட்டு பயணிப்போம்.

Related posts

பஷீர் ஷேகுதாவூத்துக்கு இளம் இரத்தங்களின் திறந்த மடல்

wpengine

முஸ்லிம் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி

wpengine

இலங்கையில் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாதா? – போராட்டம் பற்றி தற்போதைய அரசாங்கத்திற்கு சொல்லத் தேவையில்லை.

Maash