Breaking
Sun. Nov 24th, 2024
(ஷிபான் BM)
கட்சி அரசியலுக்கு அப்பால் கல்முனை மாநகரில் சுபீட்சமும் சகவாழ்வும் நிலவவேண்டும் என நிலைக்கும் இஹ்லாஸான உள்ளம்  கொண்டவர் தலைவர் றிசாட் பதுர்தீன்.

அற்ப அரசியலுக்காக இரு ஊர்களுக்கிடையே பிளவுகளை உண்டு பண்ணியவர்களை இன்று மக்கள் அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் இந்த நிலை தொடர்ந்தும் நீடித்து பகைமைபாராட்டுதலானது எமது சமூகத்தினைப் பொறுத்தவரையில் உகந்ததல்ல. இஸ்லாமிய நெறிப்படுத்தலில் வளர்க்கப்பட்ட நாங்கள் விரைவில் ஒற்றுமைப்படுத்தப்படல் வேண்டும்.

கல்முனை மாநகரசபை ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேட்கும்  மாநகரின் மூன்று முக்கிய தளங்களை தாரைவார்த்துக் கொடுத்து மு.கா வுடன் சேர்ந்து ஆட்சியமைக்கும் பேச்சுவார்த்தைகளை மு.கா தரப்பினர் மேற்கொண்டுள்ளனர்.

அரியாசணை வெறியில் பொத்துவிலில் தமிழ் தேசிய கூட்டமைப்போடு சேர்ந்து கோயில் கட்டுவதாக ஒப்பந்தமளித்த மு.கா , மொட்டுடன் கூட்டு வைத்து அட்டாளைச்சேனையில் கூத்தடிக்கும் மு.கா பொதுபலசேனாவே வந்து ஆட்சியமைக்க அழைப்பினும் மறுக்காமல் சம்மதம் தெரிவிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

பெருந்தலைவர் வளர்த்தெடுத்த கட்சியின் கொள்கைகளை குழிதோண்டிப்புதைத்து கொள்கையிழந்து தடம்புரளும் மு.கா வுக்கோ, கல்முனையில் தன்னை இஸ்திரப்படுத்த பிளவுகளை வலிந்து வரவழைத்து அதில் சுகம் காணும் பிரதி அமைச்சர் ஹரீஸையோ திருப்திப்படுத்தும் எந்தத் தேவையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கோ அதன் தலைமைத்துவதுக்கோ கிடையாது.

ஆகவேதான் மு.கா தவிர்ந்த கூட்டாட்சி தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூடுதல் கவனம் செலுத்தும். ஆனாலும் கல்முனை மாநகர் விடையத்தில் இதுவரைகாலமும் சபை ஆளப்பட்டு வந்தது போல் கல்முனை மாநகரம் பெரும்பான்மை முஸ்லிம்களே ஆளவேண்டும் எனும் கொள்கையை மயிரளவேனும் விட்டுக்கொடுக்க கட்சியோ தலைமையோ ஒருபோதும் தயாரில்லை.

இது போன்ற பல முன்மாதிரிகளுக்கு சொந்தமான றிசாட் பதிர்தீன் கட்சி அரசியலுக்கப்பால் எமது சமூகம் தொடர்பில் சதாவும் சிந்திக்கும் செயல்திறன்மிக்கவர் என்பதோடு,  முஸ்லிங்களின் அரசியலில் உச்சத்தினை தொடும்காலம் வெகு தூரத்தில் இல்லை.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *