பிரதான செய்திகள்

றிஷாட் தொலைபேசி விவகாரம்! பொலிஸ் அதிகாரி இடமாற்றம்

மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு கையடக்க தொலைபேசி வழங்கியதாக கூறப்படும் சிறைக்காவலரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மெகசின் சிறைச்சாலையில் இருந்து வவுனியா சிறைச்சாலைக்கு அவரை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனிடம் இருந்து நேற்றைய தினம் கையடக்க தொலைபேசி ஒன்று கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“ஜனாதிபதி கோட்டாபய அரசுக்கு எதிராக பிரேரணை! முகங்கொடுக்கத் தயார்- அலி

wpengine

நீ ஒரு இனவாதி, மதவாதி! றிஷாத் மீது கதிரை வீச்சு! நடந்தது என்ன?

wpengine

இராஜாங்க அமைச்சுகளுக்கான இரு புதிய செயலாளர்கள் நியமனம்.

wpengine