பிரதான செய்திகள்

றிஷாட் தொடர்பில் சஜித் மௌனம்! ரஞ்சனை விடுவிக்க கோரிக்கை ஜனாதிபதிக்கு அழுத்தம்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாட்டின் அனைத்து நீதிபதிகளிடமும் மன்னிப்பு கோர வேண்டுமென சிறைச்சாலைகள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.

அவ்வாறு மன்னிப்பு கோரினால் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ரஞ்சனை விடுதலை செய்ய தீர்மானிப்பார் என குறிப்பிட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதி பொது மன்னிப்பின் அடிப்படையில் ரஞ்சனை விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கடிதம் மூலம் கோரியுள்ளார்.

நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கரை ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, விரைவில் ரஞ்சனை விடுதலை செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பள்ளிவாசல் மீது தாக்குதல்: துரித விசாரணை நடத்த வேண்டும்

wpengine

முஸ்லிம்கள் மீது பலி சுமத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

wpengine

மன்னாரில் இடம்பெறும் சமுர்த்தி சந்தை! ஐந்து பிரதேச பயனாளிகள் பங்கேற்பு

wpengine