பிரதான செய்திகள்

ரோஹித அபேகுணவர்தனவை பார்வையீட்ட மஹிந்த

கூட்டு எதிர்க் கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்து கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

 

மத்திய வங்கி ஆளுநரை பதவி நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு முன்பாக நேற்றுமுற்பகல் கூட்டு எதிர்க் கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் ஊர்வலமும் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த எதிர்ப்பு ஊர்வலத்தின் போது பொலிஸார் பாதுகாப்பு வேலிகளை கடந்து செல்ல முற்பட்ட போது,  பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன மற்றும் ஸ்ரீயானி விஜேவிக்ரம ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பெண்களே! கோபத்தால் ஏற்படும் பிரச்சனைகள்

wpengine

தண்ணீர் எடுக்க சென்ற 15வயது மாணவி மரணம்

wpengine

ஜனாதிபதியின் உத்தியோக வெளிநாட்டு பயணத்தையொட்டி 5 பதில் அமைச்சர்கள் நியமனம்!

Editor