பிரதான செய்திகள்

ரோஹிங்ய முஸ்லிம் தொடர்பாக பொதுபல சேனா ஜனாதிபதிக்கு கடிதம்! சந்திக்க நேரம் கேட்டு

மியன்மார் ரோஹிங்யா முஸ்­லிம்­க­ளுக்கு ஆத­ர­வாக எமது நாட்டில் நடத்­தப்­படும் ஆர்ப்­பாட்­டங்கள் வெறும் அர­சியல் உள்­நோக்­கங்­களின் அடிப்­ப­டை­யி­லா­ன­தாகும். இது இன, மதங்­க­ளுக்­கி­டை­யி­லான பிளவை ஏற்­ப­டுத்தும் என பொது­பல சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் நேரில் விளக்­க­ம­ளிப்­ப­தற்கு தமக்­கான சந்­தர்ப்­ப­மொன்­றினை வழங்­கு­மாறும் அவ்­வ­மைப்பின் பிர­தான நிறை­வேற்று அதி­காரி டிலந்த விதா­னகே கடி­த­மொன்றில் குறிப்­பிட்­டுள்ளார்.

பொது­பல சேனா அமைப்­பினால்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

குறித்த கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

ரோஹிங்ய முஸ்­லீம்­களின் விவ­காரம் தொடர்பில் இலங்­கை­யிலும் பல்­வேறு ஆர்ப்­பாட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த விட­ய­மா­னது எமது நாட்­டிற்கு நேர­டி­யான தாக்­கத்­தினை செலுத்­தா­வி­டினும் இந்தப் பிரச்­சி­னையை தீர்ப்­பது தொடர்பில் நியா­ய­மான கொள்­கை­களை வகுப்­பது அவ­சி­ய­மாகும்.

பல்­வேறு அர­சியல் உள்­நோக்­கங்கள் அடிப்­ப­டையில் மியன்மார் ரோகிங்யா முஸ்­லிம்­க­ளுக்கு ஆத­ர­வாக எமது நாட்டில் போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவ்­வா­றான  போராட்­டங்­களின் வாயி­லாக சமூ­கத்தில் இனங்­க­ளுக்­கி­டை­யிலும் மதங்­க­ளுக்­கி­டை­யி­லு­மான முரண்­பா­டு­களை தோற்­று­விக்கும் வகையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­னது பெரும் கவ­லைக்­கு­ரி­ய­தொன்­றாகும்.

எனவே, இந்த விட­யத்தில் உரிய கொள்­கை­யினை நாட்டில் அவ­ச­ர­மாக உரு­வாக்­கா­விடில் பார­தூ­ர­மான எதிர்­வி­ளை­வு­களை நாட்டில் ஏற்­ப­டுத்­தி­வி­டக்­கூடும். ஆகவே இவ்­வி­வ­காரம் தொடர்பில் தங்­க­ளிடம் விளக்­க­ம­ளிப்­ப­தற்கு எமது அமைப்பின் தலைவர் ஞான­சா­ர­தேரர் தலை­மை­யி­லான குழு­வினர் தயா­ர­க­வுள்­ளனர். எங்­க­ளுக்கு தங்­களை நேர­டி­யாக சந்திப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்றினை வழங்குமாறு வேண்டுகிறோம் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டு அவ்வமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி திலாந்த விதானகேவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு  அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சாரதிகளுக்கான விசேட அறிவிப்பு!

Editor

மன்னாரில் இருந்துவந்து றிஷாட் பதியுதீன் மட்டக்களப்புக்கு சேவை செய்ய தேவையில்லை -யோகேஸ்வரன்

wpengine

இஸ்லாத்திற்கெதிரான உலகப் போரின் மீதிப் பட்டாசுகள் இலங்கை முஸ்லிம்கள் மீது வெடிக்கும் அபாயம்-அமைச்சர் ரிஷாட்

wpengine