பிரதான செய்திகள்

ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக போராட்டம் சல்மா ஹம்சா

மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் கொல்லப்படுவதை கண்டித்து காத்தான்குடியில் பெண்கள் போராட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ளனர்.

இது குறித்து பெண்கள் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினருமான சல்மா ஹம்சா கருத்துத் தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டத்தின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ், முஸ்லிம் பெண்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டத்தின் இறுதியில் இலங்கை அரசாங்கத்திற்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்குமான மகஜர்கள் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானை கைது செய்ய உத்தரவு!

Maash

துணை சுகாதார மந்திரி இராஜுக்கு நடந்த கொரோனா வைரஸ் பரிசோதனை

wpengine

11வயது மாணவனை தாக்கிய விஞ்ஞான ஆசிரியர்

wpengine