Breaking
Tue. Dec 3rd, 2024

இலங்கையில் தங்கியிருந்த ரோஹிங்யா அகதிகள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்ட டான் பிரசாத் தலைமறைவாகியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்யா அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரசாத் என்பவரை தேடிவருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நேற்றிரவு அவரது வீட்டை பொலிஸார் சுற்றி வளைத்தபோது குறித்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைத் தேடி கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே டான் பிரசாத் தொடர்பான தகவல்களை அறிந்தவர்கள் 011 2695719/ 011 2572222 ஆகிய இலக்கங்கள் மூலம் பொலிஸாருக்குத் தகவல்களை அறிவிக்கலாம்.

இதற்கிடையே நேற்று மாலை வரை ரோஹிங்யா அகதிகள் தொடர்பான தாக்குதல் சம்பவத்தின் காணொளிகளை பேஸ்புக் ஊடாக காட்சியப்படுத்திய காணொளிகள் தற்போது அழிக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *