பிரதான செய்திகள்

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக மன்னாரில் சாத்விகப் போராட்டம்

மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்ஸிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள அந்நாட்டு அரச பயங்கரவாதத்தின் இனச்சுத்திகரிப்பு செயற்பாட்டை கண்டித்து மன்னாரில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் 5ஆம் திகதி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு ஆதரவளிக்குமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்ஸிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமானமற்ற செயற்பாட்டை வண்மையாக கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், அந்த மக்களின் வாழ்வுரிமையினை பாதுகாக்கும் வகையிலும், சர்வதேசத்திற்கு அழுத்தத்தினை கொடுக்கும் வகையில் நாளை மறுதினம் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

எனவே, குறித்த ஜனநாயக போராட்டத்தில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு குரல் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கட்டுப்பாட்டு விலையை விட கூடுதல் விலைக்கு நெல்லை கொள்வனவு செய்யும் ட்டலி போன்ற உரிமையாளர்கள் .!

Maash

பட்டிக்காட்டான்

wpengine

வவுனியா பொலிஸ் மரணம்! மாட்டீக்கொண்ட மின்னல் ரங்கா

wpengine