பிரதான செய்திகள்

ரோசியின் மலசல கூடத்திற்கே இவ்வளவு தொகை என்றால் பிரதமரின் மலசல கூடத்திற்கு எவ்வளவு செலவாகும்

இன்று எரிபொருள் விலை, பஸ் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக மக்களுக்கு வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் பிரசண்ண ரணவீர கூறியுள்ளார். 

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கொழும்பு மேயரின் வீட்டிலுள்ள மலசல கூடத்தை திருத்தம் செய்வதற்காக 57 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மேயரின் மலசல கூடத்திற்கே இவ்வளவு தொகை என்றால் பிரதமரின் மலசல கூடத்திற்கு எவ்வளவு செலவாகும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கம் மக்களை ஏமாற்றி உள்ளதாகவும், மேலும் மக்களை ஏமாற்றாமல் புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

Related posts

வாக்குகளுக்காக மட்டுமே எமது சமூகத்தைப் பயன்படுத்துகின்றனர்.

wpengine

திருகோணமலை விளையாட்டு மைதானத்தை வழங்க கோரி வீரர்கள் வீதி போராட்டம்

wpengine

வில்பத்து வேட்டை! இரண்டு காவற்துறை அதிகாரிகள் உட்பட 10 பேர் கைது.

wpengine