பிரதான செய்திகள்

ரூபா 1500 பெறுமதியான பண்டங்களைக் கொண்ட பொதி ரூபா 975 இற்கு விற்பனை லங்கா சதொச

(ஊடகப்பிரிவு)

புத்தாண்டையொட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை நாட்டிலுள்ள அனைத்து சதொச நிலையங்களிலும் ரூபா 1500 பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதியொன்று ரூபா 975 இற்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

நுகர்வோரின் நன்மை கருதி புத்தாண்டு சலுகையாக இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் தென்னக்கோன் கூறியதாவது,

இந்தப் பொதியில் 1கிலோ பருப்பு (ரூபா 160), 500 கிராம் உருளைக்கிழங்கு (ரூபா 70), 1 கிலோ பெரிய வெங்காயம் (ரூபா 100), 2கிலோ வெள்ளைப்பச்சையரிசி (ரூபா 150), 500 கிராம் நெத்தலி (ரூபா 200), 1 கிலோ சீனி (ரூபா 105), 425 கிராம் டின் மீன் (ரூபா 125), 200கிராம் துண்டு மிளகாய் (ரூபா 175), 500 கிராம் கடலை (ரூபா 100), 400 கிராம் பால் மா (சதொச) (ரூபா 310) என ரூபா 1495 பெறுமதியான அத்தியாவசிய பொருட்களைக்கொண்ட பொதியை ரூபா 975 இற்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த வகையில் இலங்கையிலுள்ள மக்களின் பாவனைக்கென 10 இலட்சம் பொதிகள் இவ்வாறான சகாய விலைக்கு வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

நேற்றுவரை முஸ்லிம்களின் 7 ஜனாஷா அடக்கம்

wpengine

இன்று 4மணிக்கு இறுதி தீர்ப்பு வெளிவரும்

wpengine

அலி சப்ரி,விக்னேஸ்வரன் முன்வரிசை! பலர் விசனம்

wpengine