இன்பாஸ், அக்குறனை
ரிஷாத்தின் மனைவி உள்ளிட்ட 4 வர் கைது ஏன் தெரியுமா? விபரம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனை சம்மந்தமே இல்லாத குற்றச்சாட்டுடன் சோடித்து விசாரணை என அழைத்துச் சென்று, ஜனாதிபதியின் நேரடி அதிகாரத்தில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இன்றுடன் 90 நாட்களாக சிறையில் வாழ்கின்றார். அவருக்கு நீதி இன்னும் நிலைநாட்டப்படாத வகையில் அவரின் குடும்பத்தில் மற்றுமொரு சோகம் நடந்துள்ளது!
இந்த நேரத்தில் அவரின் இல்லத்தில் கடமைபுரிந்த 16 வயது நிரம்பிய பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் குறித்த மரணம் தற்கொலை என JMO ரிப்போட் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த விவகாரத்தை மனோ கனேசனும் அவரின் கட்சியின் அரசியல் கபோதிகளான திகாம்பரம், இராதாகிரிஸ்னன் ஆகியோருடன் ஹிரு – தெரன இதை வைத்து நன்றாக அரசியல் பிளப்பு நடத்தினர். மக்களை தூண்டினர், குறித்த பிள்ளையின் தாயிடம் அரசியல் சித்து விளையாட்டு விளையாடினார்கள், பூதாகரமாக்கினர்- ஆர்ப்பாட்டங்களை பணம் செலவு செய்து நடத்தினர் இவைகள் அனைத்தும் அரசியல் சித்துவிளையாட்டே!
மேலும், பொலிஸ் நிலையங்களுச் சென்று அவர்களை உசுப்பேத்தினர் – ரிஷாத்தை எப்போது கஷ்டத்திற்குள்ளாக்க முடியும் என்பதை தேடிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் மேலும் முழுமையாக கஷ்டத்திற்குளாக்கினர் எதிர்க்கட்சி என்ற பொட்டையன் சஜித்தின் அணி நன்றாக அரசியல் செய்து, ரிஷாத்தின் மனைவியை ஏதோ ஒருவகையில் கைது செய்ய வைத்தனர் .
அவர்களை கடைசியாக முழுமையாக வதக்கி விசாரித்தனர். ஒன்றும் கிடைக்கவில்லை. நேற்று (22) மாலை முதல் பொலிஸுக்கு நேரடியாக அழைத்து கைது செய்து இன்று காலை (23) கைது செய்ததாக அறிவித்தனர் , பின்னர் 72 நாள் தடுத்து வைத்து விசாரிக்க் அவகாசம் கோரினர் இதுதான் நாட்டின் சட்டமா?
எந்த வகையிலும் இந்த கொலையில் சம்மந்தப்படாத அவரின் மனைவியை “ குறித்த பிள்ளையை பாதுகாக்கவில்லை என்றும், அவரின் தகப்பனை பிள்ளையை தொழில் நிமிர்த்தம் பெற்றதை தப்பாக “விற்பனை செய்தனை மற்றும் பணத்திற்காக பெற்றவை” என தரகருடன் சேர்த்து போலியான வழக்கை இட்டுள்ளனர். இதுதான் கண்கெட்டுப்போன ச…..! அத்துடன் அங்கு சாரதியாக கடமையாற்றிய ரிஷாட்டின் மனைவின் தம்பி ஒருவரை புதிதாக பாலியல் வழக்கொன்றை உருவாக்கி அதாவது 2015-2019 என்று (நல்லாட்சி என்ற தொனியில் காட்டி) வழக்கிட்டுள்ளனர்.
ரிஷாதின் மனைவியை இதனுடன் முடிச்சு போட வேண்டிய தேவை இல்லை , ஆனால் சில ஆர்ப்பாட்டகாரர்களையும் சிங்கள சமூகவலைத்தள அச்சத்தையும் போக்க நடத்தப்பட்டுள்ளது தெளிவான நாடகம் என்பதே உண்மை.
ஆனால் ரிஷாத்தின் குடும்பத்தை மிக பிரதானமாக சித்திரவதை செய்யகின்றனர். அரசியலிலிருந்து துரத்த முடிந்தளவு முயற்சிக்கின்றர். இதுதான் ராஜபக்ஷ அரசு ஆட்சிக்கு வருவதற்கு மேடை மேடையாக கூறப்பட்ட வாக்குறுதி.
ஆனால் இந்த அரசு வங்குரோத்தில் செல்கின்றனர். முஸ்லிம் சமூகத்தை முடிந்தளவு கை வைத்துள்ளர். முஸ்லிம் சமூகத்தை வேறு பார்வையில் பார்த்துள்ளனர் அனைத்திற்கும் இறைவன் பொறுப்பாளன். அவன் நீதியாளன், சூழ்ச்சிக்காரனுக்கு மேல் சூழ்ச்சிக்காரன் அவன் . நிச்சயம் இந்த ராஜபக்ஷ அரசு நாசமடையும், என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
குறித்த கைதுக்கு பின்னால், acmc கட்சியின் இயலாமைம், உயர்பீடத்தின் இயலாமையும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது!
நீதியாளன் இறைவனே