பிரதான செய்திகள்

ராமநாயக்க போல் எத்தனையோ தமிழர்கள் சிறையில் வாடுகின்றார்கள்.

ரஞ்சன் ராமநாயக்க போல் எத்தனையோ தமிழர்கள் சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள் என உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.


ஆனால் தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தப் பிரச்சினைகளை பெரும்பாலும் பேசுவதை காண முடியவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.


கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி காரியாலயத்தில் நேற்றிரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,


அண்மைய காலங்களாக இந்த அரசாங்கத்தை ஒரு பாரிய பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் பல விமர்சனங்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் செய்து கொண்டு வருகிறார் என்பதை நாங்கள் பார்க்கின்றோம்.


அது தேர்தல் முறையாகட்டும் அல்லது கொரோனா தொற்று காரணமாக நடைமுறைப்படுத்தியுள்ள ஊரடங்கு சட்டமுறையாகட்டும்.


அனைத்து விடயத்திலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பாரிய பல குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் வைத்துக் கொண்டிருப்பது தொடர்பில் உண்மையிலேயே இந்த அரசாங்கத்தை ஆதரித்த ஒரு ஆதரவுக் கட்சி என்ற வகையில் நாங்கள் மன வருத்தப்படுகிறோம்.


இந்தக் கொரோனா தொற்றால் அமெரிக்கா கூட என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் நமது நாட்டின் ஜனாதிபதி மிகவும் கடுமையான சட்டங்களையும் நிர்வாகங்களையும் ஏற்படுத்தி எவ்வளவு தூரம் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அவர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.


இந்நிலையில் அரசாங்கத்தை இக்கட்டான சூழ்நிலைக்கு உள்ளாகும் வகையில் சுமந்திரன் கருத்து தெரிவித்திருப்பது ஒரு மனிதாபிமான செயலாக நாங்கள் காணவில்லை.
இவ்வாறான விடயங்களை அவர் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்ப்பதற்காக வேண்டி தான்.
ஆனால் அந்தப் பிரச்சினைகளை சுமந்திரன் பெரும்பாலும் பேசுவதை காண முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பொத்துவில் மாணவர்களுக்கு கானல் நீராகும் கல்வி

wpengine

ஹரீஸ்சுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ஏன்? ஹக்கீமுக்கு எடுக்க முடியாது

wpengine

Dematagoda Kahiriya Girl School 4 floors building opend ZAM REFAI Haj

wpengine