பிரதான செய்திகள்

ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் வீட்டின் மீது தாக்குதல்!

களனியில் உள்ள இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் வீட்டின் மீது நேற்றிரவு (18) சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.தாக்குதலில் வீட்டின் சொத்துக்கள் சேதமடைந்துள்ளதுடன், தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.களனி சரத்சந்திர டயஸ் மாவத்தையில் அமைந்துள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் வீட்டின் மீது நேற்று இரவு 10.50 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இனந்தெரியாத குழுவொன்று அங்கு வந்து இராஜாங்க அமைச்சரின் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்தியுள்ளது.தாக்குதலின் போது, ​​ஊழியர் ஒருவரே வீட்டில் இருந்துள்ளார்.இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இன்று (19) காலை அந்த வீட்டிற்கு விஜயம் செய்திருந்ததாக தொிவிக்கப்படுகிறது.தாக்குதல் சம்பவம் தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு வடமாகாண சபை எதும் செய்யவில்லை -TNA அன்ரன் ஜெயநாதன் ஆதங்கம்

wpengine

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

wpengine

ஊசிமூலம் போதை ஏற்றிய குடும்பஸ்தர் மரணம்..!

Maash