பிரதான செய்திகள்

ராஜாங்க அமைச்சர் பதவியை எஸ்.பி. திஸாநாயக்க மறுப்பு

ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டதை வெற்றிடமாக உள்ள கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள், தொலைக்கல்வி ராஜாங்க அமைச்சர் பதவியை எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு வழங்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த அமைச்சு பதவியை எஸ்.பி. திஸாநாயக்க மறுத்துள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பல காரணங்களை அரசாங்கத்தின் உயர் மட்டத்திடம் அவர் முன்வைத்துள்ள போதிலும் அவை என்ன என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

எவ்வாறாயினும் இது சம்பந்தமாக தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் தவறுகளை வெளிப்படையாக விமர்சித்தார் என்ற குற்றச்சாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சுசில் பிரேமஜயந்தவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார்.  

Related posts

கருக்கலைப்பை பாவமாக கருதுகின்றோம்-போப் பிரான்சிஸ்

wpengine

அமைச்சர் றிஷாட் விடயத்தில் மட்டும் இனவாத குழுவின் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்

wpengine

இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி

wpengine